பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கங்கைக் கரையில் காவிரித் தமிழ்


தெளிவு. இதை இலக்கண நூல் என்பர் ஆன்றோர். தொல்காப்பியம் போன்ற தெளிந்த வரையறுத்த ஓர் இலக்கணம் அமைய வேண்டுமாயின் அதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இலக்கியம் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியத்திற்கு முதல் நூலாகப் பேசப்பெறும் அகத்தியமே இந்த உண்மையை விளக்குகின்றது.

‘இலக்கிய மின்றேல் இலக்கண மின்றே;
எள்ளின் றாகில் எண்ணெயு மின்றே;
எள்ளினின்று எண்ணெய் எடுபடு மாபோல்
இலக்கி யத்தினின்று எடுபடும் இலக்கணம்.’

என்பது அகத்தியம். எனவே, அதன் வழி ஆய்ந்தால் இலக்கணத்துக்கு முற்பட்டதே இலக்கியம் என்பது தெளிவாகின்றது. இதன்படி தொல்காப்பியம் என்றும் வரையறுத்த இலக்கணம் உண்டாவதற்கு முன் எத்தனையோ ஆண்டுகளாக இலக்கியம் நாட்டில் வளர்ந்து சிறந்திருக்க வேண்டும். தொல்காப்பியர் தம் நூலிலே கண்ட இலக்கண முடிபுகளைத் தாமே கூறுவதாகக் காட்டாது ‘என்ப,’ ‘என்மனார் புலவர்’ முதலிய சொல் தொடர்களால் அவருக்கு முன் பல இலக்கணப் புலவர் கூறியதாகவே காட்டிச் செல்கின்றார். எனவே, தமிழ் நாட்டில் தொல் காப்பியர் காலத்துக்கு முன் வெகுகாலமாக இலக்கியமும் அதன் வழி இலக்கண வளமும் சிறந்திருந்தன என்பது தேற்றம்.

தமிழ் நாட்டில் மூன்று சங்கங்கள் வாழ்ந்தன என்றும், அவற்றுள் இடைச்சங்கத்தே தொல்காப்பியர் சிறந்த புலவராய் இருந்தனர் என்றும், அவ்விடைச் சங்கம் இன்றைக்கு ஐயாயிரம் - ஆறாயிரம் ஆண்டுகளுக்கு