பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி

31


மதுரையும் காஞ்சியும் அவற்றால் விளக்கப் பெறுகின்றன. அன்றைக்குத் தமிழர் கொண்டிருந்த இறை வழிபாடாகிய முருக வணக்கம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் இசைவளர்த்த பாணர் பற்றியும் அவர் வாழ்வு பற்றியும் நான்கு பாடல்கள் பாராட்டிப் பேசுகின்றன. தமிழ் நாட்டுக் காலக் கூறுபாடுகளாகிய காரும் வாடையும் இரண்டில் பேசப்பெறுகின்றன. இப்படித் தனித்தனி பெரும்பாடல்களாக அக்காலத்து நாட்டு வாழ்வினைப் படம் பிடித்துக் காட்டுவதன் மூலம் இப்பாடல்கள் தமிழ் இலக்கிய உலகிலேயே உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளன.

அடுத்து வருவன எட்டுத்தொகை—எட்டு வகைப்பட்ட தொகை நூல்கள். ஒவ்வொரு தொகையில் நானூறு, நூற்றைம்பது என்னுமாறு பலப்பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு தொகுதியில் உள்ள பாடல்களைப் பல்வேறு புலவர்கள் பாடியுள்ளனர். அத்தகைய பாடல்களுள் மக்களது காதல் கலந்த இல்லறவாழ்வை விளக்கும் பாடல்கள் தாம் அதிகம் உள்ளன. எட்டுத் தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து, புறநானூறு என்ற இரண்டைத் தவிர மற்ற ஆறு நூல்களும் காதல் வாழ்வாகிய இன்பத்தைக் குறிக்கின்றனவேயாம். அவைகளைப் பாடிய புலவர் பலர் தம் பெயர்களைக்கூடக் குறிக்கவில்லை. அவர் பாடல்தளில் சாதி சமய வேறுபாடுகளைக் காணலரிது. மனிதருக்குள் உயர்வு தாழ்வு இன்றி ஒரு சமுதாயத்தை அவர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. அவர்கள் வாழ்வெல்லாம் தமக்காக மட்டும் என்றில்லாமல் தம்மோடு வாழும் மற்றவர்களுக்காகவும் என அமைந்திருந்தது. தமிழ், தமிழ் இனம், தமிழ் நாடு என்பனவே அவர்தம் வாழ்வின் எல்லை. சிலர் அவற்றையும் தாண்டி உலகத்தையே ஒருங்கு நோக்கு-