பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கின்றனர். மனிதன் மட்டுமின்றி. உயிரினங்கள் அத்தனையும் உடன் பிறந்தவையே என்ற கொள்கையையும் இலக் கியத்தின்வழி எடுத்துக் காட்டியிருக்கின்றனர். 'யாதும் ஊரே யாவரும் கேளிர் ' என்ற புறநானூற்று அடி இந்த உண்மையை நிலைநாட்டுவதாகும். தமிழ் இலக்கியத்தில் காதல் வாழ்வுதான் பெரும்பாலும் பேசப்படுவதென்பதைக் கண்டோம். ஒருவனும் ஒருத்தியும் மணம் புரிந்துகொண்டு வாழ்வதுதான் காதல் என்பதன்று அவர் கொள்கை. மணம் செய்துகொள்வதன் முன்பே அவரவர் தத்தம் கருத்துக்கேற்ற கணவனையோ மனைவியையோ தேர்ந்தெடுத்துக் கொள்வர். பின்னர் அவர் இருவரும் பிறர் அறியா வகையில் தம்முள் கூடி மகிழ்வர். அக்களவு வாழ்க்கையும் நெடுங்காலத்துக்கு நீட்டிக்காது. அதன் உயர்ந்த கால வரம்பு இரண்டு திங்கள்தாம். அதற்குள்ளே எப்படியாயினும் அவர்கள் மனம் நிறைவேறிவிடும். அவற்றின் விரிவெல்லாம் நமக்கு இங்குத் தேவையில்லை. ஆயினும், அந்தக் காதல் வாழ்வுதான் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கே காரணமாயிற்று என்பது முற்றிலும் உண்மை.அதுவே அகப்பொருள் எனபது. இக்காதல் வாழ்க்கை பற்றி அறம் செய்தலும், பொருள் பெருக்குதலும், எல்லாம் முடிந்த பின் இறுதியாக வீடு அடைதலும் புறப்பொருள்களாகும். இவற் றைப்பற்றிய இலக்கியங்கள் அதிகம் இல்லாவிடினும், இருக்கும் அத்தனையும் சிறந்த வகையில் அன்றைய தமிழ்நாட்டை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்து கின்றன. ஆகவே, தமிழ் நாட்டு வரலாற்றுக்கு மேற்கண்ட அகப்பொருள் பற்றிய இலக்கியங்களைக்காட்டிலும்