பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி 33 புறப்பொருள் பற்றிய இலக்கியங்களே பெரிதும் துணை செய்கின்றன என்பது பொருந்தும். சங்ககால இலக்கியங்கள் இவ்வாறு இரு பிரிவாக அமைந்தன போக, அக்கால இறுதியில் வேறு வகையான இலக்கியங்களும் நாட்டில் தோன்றலாயின. அவையே அறவழி வகுக்கும் நூல்களாகப் பதினெண் கீழ்க் கணக்கு என்ற தொகுப்பில் அடங்கியுள்ளன. ஆயினும், அவை அனைத்தும் சங்கத்தின் இறுதிக் காலத்தில் தோன்றியவை எனக் கூற முடியாது. சில நூற்றாண்டுகள் இடையிட்டும் அவற்றில் சில தோன்றி உள்ளன. அத்தொகுதியில் தலைசிறந்ததாய் உலகம் போற்றும் தரத்ததாய், கடைச்சங்க காலத்தை ஒட்டித் தோன்றியதாய், இன்றும் ஐக்கிய நாட்டு மன்றம் (U.N.O.) சிறந்த நூலென எடுத்துக் கொண்டதாய் வாழும் இலக்கியமே திருக்குறள் என்பதாகும். இந்திய நாட்டுப் பெருந்தலைவர்களெல்லாம் அக்குறள் பற்றி அறிந்து ஒன்றிரண்டை மனப்பாடம் செய்து வைத்திருப்பதை நாமறிவோம். இன்று தமிழர் சிறப்பையும் இலக்கிய வளனையும் பிறவற்றையும் உலகுக்குக் காட்டும் நூல் அத்திருக்குறளேயாகும். திருக்குறள் மக்கள் வாழ்வை வகுக்கும் ஓர் இலக்கியமாய் விளங்குகின்றது. அதை நீதி நூல் என்பர் அறிந்தோர். யாருக்கு நீதி ? எக்காலத்துக்கு நீதி ? என்னும் இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் தருதல் இயலாது. இந்நூல் சாதி, சமய, கால வேறுபாடுகளைக் கடந்த ஒன்று. இது எக்காலத்திலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க நீதிகளையே கூறுகின்றது. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இத்திருக்குறளும், இதைப் போன்ற நாலடியார் முதலியனவும் ஒரு திருப்பு மையத்தை ஏற்படுத்திவிட்டன என்று கூறுதல் பொருத்தமாகும்.அதற்குமுன் அகமும் புறமும் பற்றித் தனித் தனி ஆசிரியர்கள் அவர்தம் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கு 3 -