பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கிய வளர்ச்சி 39 களும், சிந்தாமணி போன்ற சிறந்த இலக்கிய நூல்களும் அவர்கள் தந்தவைகளே. அவர்கள் எழுதிய இலக்கியங் கள் பல அவர்தம் சமயக் கருத்துக்களையே அடிப்படையா கக் கொண்டவையாதலின், பிற சமயத்தவர் பெரும்பாலாராக வாழும் தமிழ் நாட்டில் அவை விளக்கமுறவில்லை. அவற்றுள் சிந்தாமணி மட்டும் அதன் இலக்கிய வளத்தாலே சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றுடன் சேர்த்து எண்ணப்படும் தகுதி வாய்ந்து சிறந்துள்ளது. சங்க காலத்தில் எழுந்த இலக்கியங்களெல்லாம் பெரும்பாலும் அகவற்பா என்னும் வகையில் அமைந்தவை. ஆனால்,பிற்கால இலக்கியங்கள் பெரும்பாலும் விருத்தத்தாலேயே ஆக்கப்பெற்றவை.விருத்தத்தால் செய்யப்பெற்ற முதற் பெருங்காப்பியமே சீவக சிந்தா மணி. சீவகன் கதை தமிழ் நாட்டுப் பண்பாட்டு முறைக்கு ஏற்ப மொழி பெயர்க்கப்பட்ட முதல் பெருநூலாகும். காப்பிய இலக்கியங்களுள் மொழிபெயர்ப்பின் வழி வந்த முதல் நூல் இது.எனவே, சிந்தாமணி தமிழ் இலக்கியத் தில் வேருெரு திருப்பு மையத்தை ஏற்படுத்தியது என்னலாம். பைசாச பாஷையில் குளுட்டியர் எழுதிய கதையிலிருந்து இது மொழி பெயர்க்கப்பட்டது என்பர். எப்படியும் இது மொழிபெயர்ப்பு நூலே. எனவே,தமிழ் நாட்டு வாழ்க்கையை மட்டும் பாடிவந்த தமிழ் இலக்கியம் பிற மொழியிலிருந்தும் பெயர்த்தெழுதும் ஒரு புதுத் துறைக்கும் வழிகோலிற்று என்பது தேற்றம். இதை ஒட்டி இடைக் காலத்திலும் பிற்காலத்திலும் எத்தனையோ இலக்கியங்கள் மொழி பெயர்க்கப் பெற்றன.அவற்றுள் கால வெள்ளத்தை நீந்தி வாழ்வன மிகச் சிலவே. ஏழாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலே புதுவகையான இலக்கியம் தோன்றிற்றென்பதைப் பார்த்தோம். அவையே தேவாரம், பிரபந்தம் போன்ற தோத்திரப் பாக்கள். சமய வேறுபாடு காரணமாகவும், பிற இடைக்கால மாறுபாடு காரணமாகவும் ஊர்தோறும் கோயில்கள்