பக்கம்:கங்கைக் கரையில் காவிரித் தமிழ்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேக்கிழார் தந்த செல்வம்

79


என்று தம் பாட்டுடைத் தலைவர்களைப் பற்றிக் கூறித்தான் மேலே ‘மாக்கதை’ யைத் தொடங்குகின்றார். நாயன்மார் அனைவரும் அன்பால் கட்டுப்பட்டவரேயாவர். நேராக இறைவனிடம் செலுத்தும் அன்பும், அவன் அடியவரிடம் செலுத்தும் அன்பும் என அன்பு பல வகையில் பேசப்படுகின்றது. வேடுவர் தலைவராகிய கண்ணப்பர் காளத்தி நாதனைக் காணச் செல்லும்போது அவருக்குத் துணையாக, அவரைப்பற்றி முன்னே ஈர்த்துச் செல்வது அன்பு என்று தான் குறிப்பிடுகின்றார் சேக்கிழார்.

‘நாணனும் அன்பும் முன்பு நளிர்வரை ஏறத் தாமும்
பேணுதத் துவங்க ளென்னும் பெருகுசோ பானம் ஏறி,

ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல’

அவர் சென்றார் என்கின்றார் சேக்கிழார். சென்று, அங்கும் இறைவனைக் கண்டு அவன்பால் கொண்ட அன்பால் பிணைப்புண்டார் என்கின்றார்.

‘மாகமார் திருக்காளத்தி மலைஎழு கொழுந்தா யுள்ள
ஏகநா யகரைக் கண்டார்; எழுந்தபேர் உவகை அன்பின்
வேகமா னதுமேற் செல்ல மிக்கதோர் விரைவி னோடும்

மோகமாய் ஓடிச் சென்றார்; தழுவினார்; மோந்து நின்றார்.’
(கண். 105)

என்று இறைவனைக் கண்ட காலத்தில் காதலாகிக் கசிந்து கண்ணீர் விட்ட அன்பின் நிலையைக் கூறுகிறார். பின்பு அதே கண்ணப்பர் இரவிடைக் காத்து நின்றதும் அந்த அன்பினாலேயே என்பதை,

‘சார்வருந் தவங்கள் செய்து முனிவரும் அமரர் தாமும்
கார் வரை அடவி சேர்ந்தும் காணுதற் கரியார் தம்மை
ஆர்வமுன் பெருக ஆரா அன்பினிற் கண்டு கொண்டே

நேர்பெற நோக்கி நின்றர் நீள் இருள் நீங்க நின்றார்.’
(கண். 128)