பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்க கீழ் காவிரி பூம் கங்கையும் காவிரியும் நமது பாரத நாட்டின் புனித 4.மான சப்த நதிகளில் இரண்டாகும். இந்த இரு மகா நதி களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. கங்கை நதி வங்க நாட்டைப் பொன் விளையும் பூமியாக மாற்றினால், காவிரி நதி தமிழகத்தைச் செந்நெற் களஞ்சியமாகச் செழிக்கச் செய் கிறது. மேலும் இந்த இருபெரும் நதிக்கரைகளிலும் விளைந்த நாகரிகங்களும் - தொன்னெடுங்காலப் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் தன்னுட்கொண்டு, வளம் மிகுந்த நாற்றங் காலில் பசை பிடித்து வளரும் பயிரைப் போன்று, வளர்ந்து செழித்துப் பரிணமித்து வந்துள்ளன, கலை, இலக்கியம், சமயம், தத்துவம், தேசியம் முதலிய பல் வேறு துறைகளிலும் இந்த இரு நதிக்கரைகளிலும் வாழ்ந்த மக்கள் நிறைந்த சிந்தனைகளையும், நிலைத்த படைப்புக்களையும் இந்த நதிகளைப் , போலவே விற்றாது வழங்கி வந்திருக்கிறார்கள். வடநாட்டில் பிறந்து வங்க மாநிலத்தைச் செழிக்கச் செய்து பாயும் கங்கையம், தென்னாட்டில் பிறந்து தமிழ் நிலத்தைச் செழிக்கச் செய்யும் காவிரியும் இறுதியில் பார தம் முழு மைக்கும் சொந்தமான வங்காள விரிகுடாக் கடலில் சென்று' 'கலக்கின்றன. இவ்வாறு வங்காள விரிகுடாவில் - பாய்ந்து,