பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 மர்சனத் துறைகளில் தீர்க்கமான, தெளிவான கண்ணோட்டமும் ஒருசேரப் பெற்றவர் கள ல் தான் இந்தத் தேவையைத் திறமையாகவும் முழுமையாகவும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் இன்றைய நிலையில் அத்தகைய வாய்ப்பு நம்முன் உள்ளதா என்பது சந்தேகம் தான். தமிழர்களான நாம் தாக்கூரின் படைப்புக்களைத் தமிழ் அல்லது - ஆங்கில மொழி - பெயர்ப்புக்களின் மூலமே . அறிந்திருக்கிறோம். தாகூரின் நூல்கள் சில தமிழில் வெளிவந்துள்ளன. வெனினும், கணிசமான அளவுக்கு எதுவும் வந்துவிடவில்லை. ஆங்கிலத்தில் அவரது நூல்கள் 24ல் வெளிவந்துள்ளன. எனினும் ஆங்கில மொழி .. பெயர்ப்புக்கும் ஆளாகாமல், வங்க மொழி மூலத்திலேயே யுள்ள படைப்புக்களும் பல உண்டு . என்றும் தெரிய வருகிறது. எனவே இன்றைய நிலையில் ஆங்கிலத்திலும் - தமிழிலும் வெளிவந்துள்ள - தாகூரின் படைப்புக்கள், தாஸ் ரைப் பற்றியும் அவரது படைப்புக்களைப் பற்றியும் வெளிவந்துள்ள நூல்கள், பத்திரிகைக் கட்டுரைகள் , மற்றும் ஆங்காங்கே தென்படக்கூடிய குறிப்..க்கள் ஆகிய , வற்றின் துணை கொண்டுதான் தாகூரை நாம் தெரிந்து கொள் 35 முடியும். அந்த அறிவைக் கொண்டு தாகூரை டிம் பாரதியையும் ஒப்பு நோக்கிக் காணும் பணியை மேற் கொள்ள முடியும். ஆனால் இந்தப் பணியும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குத் தமிழகத்தில் ஓரளவுக்கேனும் நடந் திருப்பதாகத் தெரியவில்லை. இவ்விஷயத்தில் இலக்கியம்: - நோக்கிலும் போக்கிலும் என்னோடு பெரும்பாலும் ஒத்த கருத்தும் கண்ணோட்டமும் கொண்ட எனது நண்பரும், இலங்கையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளருமான டாக்டர் க. கைலாசபதிதான் முன்னோடியாக விளங்கியுள்ளார். தாகூரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 'மகாகவி கண்ட மகாகவி” என்ற தலைப்பில், அவர் தாம் ஆசிரியராகவிருந்த 'தினகரன்' , பத்திரிகையில் சில - கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். அவை 'இரு மகாகவிகள்' என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளி வந்துள்ளன. பாரதியையும்