பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைத் தட்டி ஷேய்க்kஜல் தன் கூரையும்.. - பாரதியையும் மேலோட்டமாகப் - பார்க்கின்றபோது, அவர்கள் இருவரது வாழ்க்கையிலும், வாழ்க்கையில் கிட்டிய வாய்ப்புக்களிலும், சாதனைகளிலும் காணும் ஒற்றுமைகளைக் காட்டிலும் வேற்றுமைகளே நம் மனத்தில் சட்டென்று தோன்றும். தாகூர் சென்ற நூற்றாண்டின் பிற்பாதியில் 1861ம் ஆண்டில் (மே மாதம் 7ம் தேதி) தோன்றி, இந்த நூற்றாண்டின் முற்பாதியில் 1941ம் ஆண்டில் (ஆகஸ்டு மாதம் 7ம் தேதி) அமர ரானவர். அதாவது கிட்டத்தட்ட நிறைவாழ்வு வாழ்ந்து, தமது எண்பதாவது வயது பூர்த்தியான பின்னர் பூதவுடலை நீத்தவர். ஆனால் பாரதியோ சென்ற நூற்றாண்டில் தாகூருக்குப் பின்னர் 1882ம் ஆண்டில்' (டிசம்பர் 11ம் தேதி) தோன்றி, இந்த நூற்றாண்டில் தாகூருக்கு முன்பே, தமது நாற்பதாவது வயது பூர்த்தியாகு முன்பே 1921ம் ஆண்டில் (செப்டம்பர் 11ம் தேதி) அற்பாயுளில் நம்மை விட்டுப் பிரிந்து அமரரானவர். எனவே இருவருடைய ஆயுட் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தாகூரின் ஆயுட் காலத்தில் சரிபாதிக்' காலம் தான் பாரதியின் ஆயுட்கலாம் என்பதை நாம் பார்க்கிறோம்...