பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தாகூர், அந்தச் சூழ் நிலையில் தமது எட்டாவது வயதிலேயே தமது முதற் கவிதையை எழுதிவிட்டாரென்றால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. மேலும் அவரது கவிதைத்திறனை வளர்த்துப் பரிணமிக்கச் செய்யவும், அவரது குடும்பச் சூழ்நிலை சாதகமாக இருந்தது. தாகூர் பாலியத்தில் தாமியற்றிய கவிதைக்குத் தாமே. இசை யமைத்துப் பாடியதைக் கேட்ட தாகூரின் தந்தை மகிழ்ச்சி யுற்று, தம் மகனுக்கு ஐநூறு ரூபாய் பரிசளித்தார் என்று சாந்தவன குமார தாஸ் என்ற கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். பாரதி பிறந்து வளர்ந்த சூழ்நிலையோ நாம் அறிந்தது தான், பூர்விகக் கிராமமான - சீவலப்பேரியை விட்டு ஜீவனோபாயத்தையும் மேம்பாட்டையும் கருதி எட்ட க.தரம் "ஜமீன்தாரின் ஆதரவை நாடி எட்டயபுரத்துக்குக் குடி வந்து வாழ்ந்த, மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த சின்னச்சாமி ஐயருக்குப் புதல்வராகப் பிறந்தவர் பாரதி. சின்னச்சாமி ஐயருக்கோ தம் புதல்வனைக் : காதப் புலவனாக்க வேண்டுமென்ற எண்ணம். எனவே "வோடு தத்தை விதிப்பினுக்கு அஞ்சி"த்தான் பாரதி பாலியத்தில் கணக்கோடு மாரடிக்க நேர்ந்தது. - கவிதை பாடுவதில் பாரதிக்கிருந்த ஆர்வத்தையுணர்ந்து, அவரை அந்தத் திசையில் வளர்ப்பதற்குச் சின்னச்சாமி ஐயர் முயலவில். இளமையில் பாரதி எட்டயபுரத்திலிருந்த புலவர் பெரு மக்களோடு தம் தந்தைக்குத் தெரியாமல் தான் தொடர்பு வைத்திருந்தார். அந்தப் புலவர்களும் எப்படிப்பட்டவர்கள்? "சின்னச் சங்கரன் கதை”யில் பாரதியே சொல்வது போன்று, ஒரு பாட்டில் எத்தனைக் கெத்தனை அசுத்த:கான வார்த்தைகள் சேர்கின்றனவோ, அத்தனைக் கத்தனை சுனை யதிகமென்பது கவுண்டனூர்ப் புலவர்களின் முடிவு என்ற, தகுதி பெற்றவர்கள் தான், இவ்வாறு காமரச மஞ்சரியாய் ஜமீன்தாருக்கு லாலி பாடி வந்த ஆஸ் தான் புலவர்களின் மத்தியிலும், கோழிச் சண்டை விடுவதிலேயே