பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 தைப் பற்றியும், ருஷ்யாவைப் பற்றியும், 'ஆப்பிரிக்கத்துக் காப்பிரி நாட்டைப்பற்றியும், 'தென்முனையடுத்த தீவுகள்? பலவற்றைப்பற்றியும், தெற்கு மாகட்டலுக்கு நடுவினிலே, அங்கோர் கண்ணற்ற தீவாக விளங்கும் பீ'ஜித்திவைப் பற்றியும் பாரதியார் 1.ாட்டல்கள் பாடியள்ளாரே தவிர, அவர் இந்திய நாட்டின் எல்லையைத் தாண்டி அதிமா தவர்; தாண்டிச் செல்ல வழியும் வகையும் அற்றுப் போனவர். தமது இலக்கிய வாழ்வின் செம்பாதிக் காலத்தை, புதுச் சேரியில் . அடைக்கலம் புகுந்து, அந்தக் குறுகிய எல்லைக் குள்ளேயே அஞ்ஞாத வாசம் புரிந்து, நிர்ப்பந்த வசமாகக் கழிக்க நேர்ந்தவர்; பாலியத்தில் தம் அத்தையை நாடிக் காசிக்குச் சென்றதும், பின்னர் காங்கிரஸ்' மகாநாட்டில் கலந்துகொள்ளச் : காசிக்குச் சென்றதும், வரும் வழியில் நிவேதி தாதேவியைச் சந்திப்பதற்காகக் கல்கத்தா சென்றதும், பின்னர் சூரத் காங்கிரசுக்குச் சென்றதும்தான் பாரதி மேற்கொண்ட வட்நாட்டுப் பயணங்களாகும். தென் னாட்டில்கூட, பாரதி தமது சொந்தத் தாயகமான தமிழகத் "தின் பல நகரங்களையும்கூடப் பார்த்ததாகத் தெரியவில்லை. இளமையில் எட்டயபுர மன்னரோடு திருநெல்வேலி ஜில்லா வின் சில இடங்களுக்குச் சென்று வந்ததைத் தவிர, பாரதி பின் வாழ்நாட்' பயணம் முழுவதும் எட்டயபுரம், திருநெல்வேலி, மதுரை, சென்னை, புதுச்சேரி, கடையம் ' முதலிய ஊர்களிலேயே பெரும்பாலும் அடங்கிவிட்டது எனலாம். இவற்றைத் தவிர ஈரோடு, செட்டிநாடு போன்ற இடங்களும் தமிழகத்தில் அவரது திருப்பாதங்கள் பட்ட 'ஸ் தலங்களாகும், ஆரம்பகாலச் சென்னை வாசத்தின்போது விபிஏ' சந்திர பாலரை அழைத்து வருவதற்காக ராஜ மகேந்திர ' புரத்துக்குச் சென்றதும், பின்னர் கடைய வாசத்தின் போது ' திருவனந்தபுரம் சென்று வந்ததும் தான் அவரது அண்டை மாகானப் பயணங்கள் ' 'எனலrrம். எனவே, பாரதி உலக நாடுகளைக் கண்டு களித்ததெல்லாம் தமது “ஞானரதப் பயணத்தின் மூலமாகத்தான். ' . '. " ஊர் துரை, செ, முழுவதும் தவிர, பரதன்