பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 23 - உணரத் தொடங்கியது. இதனால் தான் உலகப் புகழ் பெற்ற தாகூர் மறைந்த காலத்தில், பாரதநாடு மட்டும் மல்லாமல் உலகமே அவரது மறைவுக்காகக் கண்ணீர் சிந்தியது; அவர் புகழைப் பாடியது. ஆனால் பாரதி காலமான சமயத்திலோ பாரதியின் உற்ற நண்பரான பரலி நெல்லையப்பர் தமது கட்டுரையொன்றில் பாரதியின் கடைசி நாட்கள் : தினமணி) குறிப்பிட்டுள்ளவாறு, அவரது சடலத் துக்குப் பின்னால் பத்துப் பன்னிரண்டு பேர்கள் தான் தொடர்ந்து சென்று, அவருக்கான ஈமக்கிரியைகளைச் செய் தார்கள். பாரதியின் நண்பர்களில் வேறு சிலரும்...., 40று நாள் மாலையில் 'சுதேசமித்திர'னில் வெளிவந்த 'செய்திக்குறிப்பின் மூலமாகத்தான் பாரதியின் மறைவைப் ' பற்றித் தெரியவந்தார்கள் என்றும் அறிகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இன்னொரு 'சம்: : வத்தையும் நிக்காவுகூர வேண்டும். பாரதி புதுச்சேரியை விட்டு வெளியேறிக் கடைK.மும் எட்டயபுரமயாக "அலைந்து வசித்து வந்த காலத்தில், எட்டயபுர மன்னரிடம் 'ஆதரவு நாடி நின்ற காலத்தில், 1919ம் ஆண்டில் நோபல் "பரிசும் உலகப் புகழும் பெற்ற தாகூர் தமிழகத்தின் கலாசாரத் தலைநகரெனச் சொல்லத் தகுந்த மதுரைக்கு வருகை தந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் பாரதி தாகூரை நேரில் சென்று சந்திக்க விரும்பியதாகவும் சந்தித்து அவரைக் கவிதைப் போட்டிக்கு அழைத்து, அதில் யாருடைய கவிதை நன்றாக இருக்கிறது என்று போட்டி காணவந்த பொது ஜனங்கள் தீர்மானிக்கிறார்களோ, அவர்களுக்கே நோபல் பரிசு சேர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் அந்தப் போட்டியை நடத்த விரும்பிய தாகவும், அதில் தாம் நிச்சயம் வெற்றிபெற முடியும் எனக் கருதியதாகவும், நாம் மட்டும் உலகப்புகழ் பெற முடியாதா? அதற்காகத்தான் நோபல் பரிசைத் தாகூரிட மிருந்து வெல்ல வேண்டும்" என்று பாரதி கூறியதாகவும்