பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற்றாக வே' தெலும் சிலரின் பாராட்டுதலைப் பெற்றன என்று அறிகிறோம், அதுவும் 1919ம் ஆண்டில் பாரதி. எட்டயபுர மன்னருக் கெழுதிய சீட்டுக் கவியில் அவரது வாயிலாகவே தெரிந்து கொள்கிறோம். கிட்டத்தட்ட இருபதாண்டுக்காலம் வறுமை வாழ்வை மேற்கொண்டு, இந்த நாட்டுக்காக உழைத்து, அற்புதமான கவிதைகளை ஆக்கிப் படைத்து, இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றிலும், உலகத்தின். இலக்கிய வரிசையிலும் அழியாத இடத்தைப் பெறும் அளவுக்குப் பணிசெய்து முடித்திருந்த நிலையிலும், தாமே ஒரு காலத்தில் உதறித் தள்ளி விட்டுப்போன அதே எட்டயபுரம் சமஸ்தானத்தை மீண்டும் நாடி, ஜீவனே பாயத்துக்காகத் தமது புகழையும் பெருமையையும் தாமே விளம்பரப்படுத்தி நிற்க நேர்ந்த துர்ப்பாக்கியத்துக்கு ஆளான பாரதியைத்தான், தாகூர் தமிழகத்துக்கு விஜயம் செய்த காலத்தில் நாம் பார்க்கிறோம். இத்தகைய சூழ் நிலையில் பாரதிக்கு ஏற்பட்ட அந்தக் கவிதைப் போட்டி எண்ணம் நியாயமான தர்மாவேசத்தினாலும் நெஞ்சக் கொதிப்பாலும் எழுந்த எண்ணமாகவே இருக்க முடியும் என்பதை நாம் லகுவில் உணர்ந்து கொள்ளலாம்: '* --" ' , இவையெல் லாவற்றுக்கும் மேலாக, "பாரதி தாகூரைப் பற்றி நன்கறிந்திருந்தார். இளமையில் பாரதி காசிவாசம் புரிந்த காலத்திலேயே" தாகூர் " வங்க நாட்டின் ஒப்பற்ற கவிஞராக மதிக்கப்பட்டுவிட்டார். எனவே காசியிலிருந்த பாரதிக்கும் தாகூரின் புகழ் எட்டியிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். எனினும் அத்தகைய கவிஞரை நேரில் சென்று சந்திக்கும் எண்ணம் கல்கத்தாவுக்கு அருகிலுள்ள காசியில் இருந்த பாரதிக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பின்னர் அவர் காசிக் காங்கிரசுக்குச் சென்றுவிட்டு நிவேதிதா தேவியைச் சந்திப்பதற்காகக் கல்கத்தாவுக்குச் சென்ற காலத்திலும், பாரதி தாகூரைக் காணவில்லை; தாகூரைக் கண்டு பேச வேண்டும் என்ற எண்ணமே நாம் முன்னர் க குறிப்பிட்டபடி அவருக்கு 1919ம் ஆண்டில்