பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீந்தனே ஒண் அடையாள் ! - இவ்வாறு இந்த இருபெருங் கவிஞர்களின் வாழ்க்கையையும் அதில் அவர்கள் பெற்ற வாய்ப்பையும் பார்க்கின்றபோது, இத்தகைய வேற்றுமைகள் நம் மனத்தில் தோன்றுவது இயல்புதான். என்றாலும், இவர்கள் இருவரது சாதனையிலும்,, சத்திய வேட்கையிலும் வேற்றுமை' யம்சத்தைவிட, ஒருமைப்பாடே மேலோங்கியிருப்பதை நாம் காணமுடியும். பாரதியைத் தாகூர் அறியவில்லை; ஆனால் பாரதி தாகூரை அறிந்திருந்தார். மேலும் பாரதி தேசிய கவியாக முகிழ்த்து வளரத் தொடங்கிய பருவத்தில், தாகூர் மலர்ந்து மணம் பரப்பிப் புகழ் எய்திவிட்ட மூத்த கவிஞராகத் திகழ்ந்தார். அத்துடன் பாரதத்தின் மறு மலர்ச்சிக்கே முன்னோடியாகவிருந்த வங்க நாட்டின் தேசிய மறுமலர்ச்சி, தமிழ் நாட்டையும் கவர்ந்து அதனைத் தன் வழியில் விழிப்பூட்டிய காலத்தில், வங்கநாடே - தமிழ் நாட்டுக்கும் ஆதர்சமாகத் திகழ்ந்தது. தேசிய மறுமலர்ச் சியில் பங்கெடுக்க முனைந்த தமிழக மறுமலர்ச்சியும், அந்தத் தமிழகத்துத் தேசிய கவியுமான பாரதியும் பாலியப் பருவத்தி லிருந்த காலத்தில், வங்க நாட்டுத் தேசிய மறுமலர்ச்சியும், அதன் வாரிசான தாகூரும் முற்றி, முதிர்ந்து பக்குவம் கனிவெய்திய நிலையில் இருந்ததையும் நாம் காணமுடியும்