பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கும் அளவுக்கு, இந்தக் கவிஞர்கள் கவிதையுலகில் தத்தம் தனித்தன்மையையும் மேதா விலாசத்தையும் நிலை நாட்டிக் கொண்டவர்கள்; இந்தத் தனித்தன் கய ஒருபுற மிருக்க, இருவரிடத்திலும் நாம் பற்பல ஒற்றுமையம்சங்களை யம் காண்கிறோம். இரண்டு கவிஞர்களும் பண்டைய மரபிலக்கண வழியில் நின்று கவிதை யாத்தவர்தனல்ல. சொல்லும் பொருளில் புதுமையைக் கையாண்டடதைப் போலவே , அதனை உருவேற்றிவிடும் வாகன யான வடிவத்திலும்கூட அவர்கள் புதுமையைக் கையாண்டார் கள். பாரதி பழைய யாப்பிலக்கண மரபிலிருந்து பெரிதும் மாறுபட்டுச் சென்றவர் எனச் சொல்லமுடியாது. எனினும் அவரே கூறுவதுபோல், எளிய சந்தம், எளிய நடை, ஐனங்கள் விரும்பும் மெட்டு" என்பதையே தமது கவிதையின் வடிவாகக் கொண்டு, யாப்பிலக்கணத்துக்குப் புறம்பான, அதாவது அந்த இலக்கணத்தில் வரையறை கூறப்படாத பிற்காலத்துச் சந்தங்களையும் மெட்டுக்காைடம் பயன்படுத்தியே பெரும்பாலான L.ITடல்களை இயற்றி 4ள்ளார். குடுகுடுப்பைக்காரன் பாட்டு, குருவிக்காரிப் பாட்டு, பாரதியே சொல்லியுள்ளது போல் (பாஞ்சாலி கர்,தம்: குறிப்புக்கள்) ** தெருவில் ஊசிகளும் பாசி மணிகளும் விற்பதோடு பிச்சையெடுக்கவும் செய்கின்ற” பெண்களின் பாட்டு முதலிய பாமர வழக்குப் பாடல் கெட்டுக்களையும் பாரதி பயன்படுத்தினர்; : வார்த்தை களை ஃபும் செய்கைகளையும் விளக்குதற்கு” இப்படிப்பட்ட நடைகள் மிகவும் பொருத்தமாக உள்ளன என்பதையும் அவரே உணர்ந்து குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நடைகளைத்தவிர, தமிழ்க் கவிதை இது வரையிலும் காணாத எளிய, புதிய சொற்களையும் பதச்சேர்க்கை கலையும் அவர் கையாண்டு வெற்றி கண்டார். இதனால் பண்டித உலகம் அவரைக் கவிஞர் என்று ஏற்கவே மறுத்து வந்தது; பண்டாரப் பாட்டுப் பாடகன் என்று கூடச் சொல்லியது. பாரதி வாழ்ந்த காலத்தில் 'தமிழ்