பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவரது இசைப் பாடல்கள் அ கு ஒரு புதிய விழிப்பையே ஏற்படுத்தின. அதேபோல் தமிழ் நாட்டில் - தமிழிசை இயக்கம் தோன்றிய காலத்திலும், ' தமிழில் பாடுவதற் கேற்ற இசைப் பாடல்கள் உண்டா?” என்று சிலர் நாப்பறை கொட்டிக் கேட்கத் துணிந்தபோது, “ஏன்? பாரதி பாடல்கள் இல்லையா?' என்று பதிலுக்குக் கேட்டு வாயடைக்குமளவுக்கு, பாரதியின் எளிமையும் இனிமையும் நிறைந்த பாடல்களும், சாகித்தியங்களும் தமிழிசைக்கு அன்றும் இன்றும் உரமளித்து வந்திருப்பதையும் நாம் அறிவோம். இரு கவிஞர்களுமே நல்ல இசைஞானம் மிகுந்த பாடகர்கள். தாகூர் தமது கவிதைகளைத் தாமே இனிமையாகப் பாடுவார். பாரதியும் சிறந்த பாடகர சக இருந்தார் என்பதை அவர் பாடக் கேட்கும் பாக்கியம் பெற்ற தமிழன்பர்கள் வாயிலாக அறிகிறோம்.. . நிறைந்த இன்றும் உலஞர்களுக்கு கவின் 1. இந்த இரு கவிஞர்களின் படைப்புக்களைப் பார்க்கின்ற போதும், இருவரும் இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர்கள் என்பதைக் காண் கிறோம். கவிதை, இசைப்பாடல், நாவல், நாடகம், சிறுகதை, இலக்கிய விமர்சனம், தத்துவ விசாரணை, அரசியல் கட்டுரை, சிந்தனை ஆராய்ச்சி முதலிய பற்பல துறைகளிலும் தாகூரின் படைப்புக்கள் வெளிவந் துள்ளன. மேலும் தாகூர் ஓவியராகவும், நடிகராகவும், ஆசிரியராகவும் பணியாற்றியவர். எழுத்துத் துறையில் பாரதியும் தாகூரைப் போலவே பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர், கவிதையில் மட்டுமல்லாமல் உரை நடைத் துறையிலும் பாரதி ஆற்றிய பங்கு மகத்தானது. பத்திரிகைத் தொழில், குடும்ப வாழ்க்கை , அரசியல் சூழ் நிலை, முதலியவற்றில் ஏற்பட்ட பல்வேறு சங்கடங் களின் காரணமாக, அவர் இயற்றிய "சின்னச் சங்கரன் கதை”, “'சந்திரிகையின் கதை” போன்ற அற்புதமான இலக்கியங்கள் அரைகுறையாக நின்றுவிட்டபோதிலும், அவரிடம் சிறந்த நாவலாசிரியராவதற்கான தன்மைகள்