பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 கொண்டார்கள். இதன் காரணமாக, இவர்கள் பழமையின் பிடிப்பிலிருந்து பூரணமாக விடுதலை பெற்றுவிடாமல் , பண்டைத் தத்துவங்களில் காணும் பல்வேறு முரண்பாடு களையும் அங்கீகரித்துக்கொண்டு, அவற்றின் அஸ்திவாரத் திலேயே தமது மனிதாபிமானத்தைக் கட்டி வளர்த்தார்கள், இதனால் வேதாந்த சாரத்திலிருந்த மனிதாபிமானத் தன்மையைக் கட்டிக் காத்து, அதனை நடைமுறை வாழ்க்கை -யில் பிரயோகித்துப் பார்க்கத் தூண்டிய விவேகானந்தரைப் போல், இவர்களும் இந்திய நாட்டில் பண்டைக் கலாசாரப் பாரம்பரியமே உலகுக்கெல்லாம் வழிகாட்டும், வழிகாட்ட வேண்டும் என்று நம்பினார்கள். எனவே நம்மிடையே நிலவிய சிறுமைகளைக் கண்டிக்கத் தவறாத அதே நேரத்தில், இந்தியத் தத்துவ தரிசனமே உலகுக்கெல்லாம் ஒளி வழங்கும் என்பதிலும் அழுத்தமான உறுதிகொண்டிருந் தார்கள். ' இதனால் தான் பாரதி ' “இந்தியனாகப் பிறந்திருப்பதே பெரிய பாக்கியம்”. (பாரதி) புதையல் -2 : ரா: அ. பத்மநாபன் தொகுப்பு) என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். தாகூர், “ என க பி ஐப்ப புண்ணிட்டானது. ஏனெனில் நான் இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன்" என்று பாடினார். இந்தியராகப் பிறந்திருப்பதில் பெருமையும் களிப்பும் கொண்ட இந்தக் கவிஞர்கள் இந்தியாவே உலகுக் கெல்லாம் வழிகாட்டும் என நம்பினார்கள். கீழைநாட்டு, மேலைநாட்டு உறவுகளைப்பற்றி எழுதும்போது, ' தாகூர் பின்வருமாறு எழுதினார் : “நைல் நதிக்கரையின் பருவக் காற்று கங்கை நதிக்கரையின் தூரா தொலைக்கரைகளைச் செழிக்கச் செய்கிறது. அதேபோல் கீழைநாட்டிலிருந்து மேலை நாட்டுக் கரைகளுக்குக் கருத்துக்களும் எல்லை. கடந்து சென்று அங்குள்ள மனிதர்களின் இதயங்களில் நல்வரவு பெற்று, அவர்களது நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டும்.” மேலும் இதனைத் தாகூர் அமெரிக்கா சென் பிருந்த காலத்தில், அங்கு அவர் நிகழ்த்திய பிரசங்கங்களில்