பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'. எல்லாரும் அமர நிலை எய்து நண்முறையை ' - இந்தியா. உலகிற் களிக்கும். ஆம், இந்தியா உலகிற் களிக்கும்-ஆம், ஆம் இந்தியா உலகிற் களிக்கும் ! - - - - ஆம்; ஆம், ஆம் என்று முக்காலும் முழங்கி அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் பாடும் பாரதியின் இந்த நம்பிக்கையும் சரி, தாகூரின் "நம்பிக்கையும் சரி, இரண்டும் இந்திய நாட்டுத் தத்துவ மேன்மை பற்றிய எண்ணத்திலும் பிடிப் பிலும் உறுதியிலும் இருந்து தான் உதயமாகியுள்ளன என்பது வெளிப்படை. -- : . . : : ... இந்திய தத்துவ தரிசனத்தின் அடிப்படையில் நின்றே உலகு தழுவி 1.4 மனிதாபிமானக் கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்ட இந்தக் கவிஞர்களின் அனுபவத். திலும் ஒரு வித்தியாசம் உண்டு. தாகூர் உலகமெல்லாம் சுற்றிய கவிஞர்; . உலக மக்களை நேரே - கண்டவர். உாரதியே" இந்திய மக்களை மட்டுமே நேரில் கண்டவர். எனவே . தாகூரின் இந்த மனிதாபிமானம் அறிவு பூர்வமாகவே உரம் பெற்றதென்றும், பாரதியின் மனிதாபி: மானம் உணர்வு பூர்வமாக உருவாயிற்றென்றும் கூறலாம். இவ்வாறு உருவாவதற்கு இவ்விருபெரும் புலவர்களும் வாழ்ந்த காலச் சூழ்நிலையும், வாழ்க்கைச் சூழ்நிலையுமே காரணங்கள் என நாம் கொள்ளலாம்.. - தாகூரும் பாரதியும் இந்திய நாட்டின் , . ண்டைய தத்துவங்களிலும் மத இலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டு, அவற்றிலே காலூன்றி நின்ற போதிலும், அந்தத் தத்துவங்களில் புகுந்துவிட்ட மாயாவாதக்திலும், 2 நித்தியக் கோட்பாட்டிலும், இருவருமே சிக்கிக் கொள்ளவில்லை. அதேபோல் இருவரும் எந்த ரூபமான துறவறத்தையும் அங்கீகரிக்கவில்லை. தாகூர் தமது நினைவுக் குறிப்புக்களில், "இந்த உலகம் இனியது. நான் மாள விரும்பவில்லை. என்றென்றும் நிரந்தர:1வான மானுட வாழ்வையே, நான்