பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை ரகுநாதன் என்ற பெயரில் எழுதி வரும் திரு. சிதம்பர ரகுநாதன் முந்திய தலைமுறையைச் சேர்ந்த மூத்த எழுத் தாளர். ஆற்றல் உ.பிக்க எழுத்தாளரான இவரது கதைகள், நாவல்கள், இவக்கிய விமர்சனக் கட்டுரைகள், மற்றும் 'திருச்ற்ற ம்பலக் கவிராயர்' என்ற புனை பெயரில் இவர் இயற்றியுள்ள கவிதைகள் முதலியல்ை அவற்றின் தளித்த முத்திரையினால், இவருக்கு இலக்கிய உலகில் ஒரு சிறப்பான ஸ் தானத்தைத் தேடிக் கொடுத்துள்ளன. இவரது “பஞ்சும் பசியும்' என்ற நாவலே தமிழ் மொழி பிலிருந்து முதன் முதலில் ஐரோப்பிய மொழியொன் றில் (செக் மொழியில்) மொழி பெயர்த்து வெளியிடப்பட்ட முதல் தமிழ் - தrவிலாகும். மேலும் இவரது கதைகள் பலவும் செக், ஹங்கேரியன், ஜெர்மன்', போலிஷ், ரஷ்யன் போன்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன." புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரான இவர், அவரது படைப்புக்களைத் தொகுத்துப் பல தொகுதிகளாக வெளிக் கொணர உதவியதோடு, புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும் மிகவும் போற்றத்தக்க முறையில் நூலாக எழுதி வழங்கியுள்ளார். புதுமைப்பித்தனின் இலக்கியப் பரம் பரையில் பூத்த மலராக விளங்கிய இவர், தமிழ்நாட்டில் 'முற்போக்கு இலக்கியப் படைப்புக்களுக்கும். முன்னோடியாக விளங்கியுள்ளார். இவரது இலக்கியப் பணிகளைப் பாராட்டி, இவருக்கு சோவியத் நாடு வழங்கும் நேரு நினைவுப் பரிசும் இருமுறை வழங்கப்பட்டுள்ளது. இப்பரிசைப் பெற்ற வெற்றியாளர் என்ற முறையில் இவர் சோவியத் நாட்டுக்கும் சென்று வந்துள்ளார்." ஒப்பிலக்கிய நூல்கள் அரிதாகவே வெளிவரும் தமிழ் இலக்கிய உலகில் மகாகவிகளான பாரதியையும் தாகூரையும் சமுதாயக் கண்ணோட்டத்தில் ஒப்புநோக்கி ரகுநாதன் அவர்கள் எழுதியுள்ள இந்நூலை மீண்டும் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதனைத் தொடர்ந்து இவரது பிற நூல்களின் மறு பதிப்புக்களும் மற்றும் புதிய படைப்புக்களும் எங்கள் வெளியீடாகத் தொடர்ந்து வெளி வரும் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள் கிறோம். மதுரை ! செ. செல்லப்பாண் 14-11-80