பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து பார். உனது உழைப்பிலும் நெற்றி வியர்வையிலும் அவனோடு இணைந்து நில். * . {பாடல் : 11) தாகூர் எவ்வாறு ஏழைப்பட்ட, உழைக்கும் மக்க டத்திலே கடவுளைக் காண்கிறாரோ, அதேபோல் பாரதியும் (தொழில் : கவிதை) காணத்தான் செய்கிறார்: இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வோரே! எந்தி ரங்கள் வகுத்திடு வோரே! கரும்பைச் சாறு பிழிந்தெடுப் பீரே! கடலில் மூழ்கி நன்முத் தெடுப்பீரே , அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடு வீரே! பெரும்புகழ் நுமக்கே இசைக்கின்றேன்; பிரம் தேவன் கலஇங்கு நீரே! எனத் தொடங்கி, மேலும் மண்ணெடுத்துக் குடங்கள் செய்வோர், மரத்தை வெட்டி வீடு கட்டுவோர், காய்கனி விளைப்போர், உழுது பயிரிடுவோர், எண்ணெய், பால், நெய் கொணர்வோர், இழை நூற்று ஆடை நெய்வோர், பாட்டும் செய்யுளும் கோத்திடும் கவிஞர், பரத நாட்டியக் கூத்திடு வார், சாஸ்திர விற்பன்னர் என்றெல்லாம் பலரையும் வாழ்த்திவிட்டு, இறுதியிலே பின்வருமாறு முத்தாய்ப்பு வைக்கிறார் : தேட்ட மின்றி விழிஎதிர் காணும் தெய்வ மாக விளங்குவின் நீரே! இவர்கள் எல்லோருமே தேடிச்சென்று காணவேண்டிய அவசியமில்லாமல், கண்முன்னாலேயே பிண்டப் பிரமாணங்க ளாகத் தோன்றும் கடவுளர்களாகத் தோற்றமளிக்கிறார்கள் என்பதே பாரதியின் கூற்று.