பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ தில் இaை Eர்ச்சியா, இரு தரிஞர்களுக்க. உழைப்பாளி . மக்களிடம் கடவுளைக் காணும் மேற் கூறிய கண்ணோட்டத்தில் இரு கவிஞர்களுக்குமிடையே வேறுபாடான பார்வை , இருப்பதற்கும் காரணம் உண்டு, இந்திய நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டுமெனக். கனவு கண்டவர் பாரதி. தாம் இயற்றிய “புதிய ஆத்திசூடி” யிலேயே' **கைத்தொழில் போற்று, கூடித் தொழில் செய்" என்றெல்லாம் அவர் ஆணையிட்டார். மேலும், கரத்தாலும் கருத்தாலும் உழைப்பவர்களிடையே, அதாவது உடல் உழைப்பால் உழைக்கும் மக்களையும், அறிவின் பலத் தால் உழைக்கின்ற அறிவாளிக் கூட்டத்தையும் ஒன்றாக்கி, அவர்களிடையே பேதம் காணாமல் எல்லோரையுமே அவர் உழைப்பாளிகளாகக் கருதினார். இதனாலேயே அவர் கலைமக ளைப்பற்றிப் பாட வரும்போதுகூட, ' கை வருந்தி உழைப்பவர் தெய்வம்; கவிஞர் தெய்வம்" (வெள்ளைத் தாமரை) என்று இருசாராரையும் இணைத்துப் பாடுகிறார். மேலும், இரும்பைக் காய்ச்சி உருக்குவார்,.. எந்திரங்கள் வகுப்பார் முதலிய எந்திரத் தொழிலாளர்களைப் பாராட்டிப் பாடும் அதே பாட்டில், பாட்டும் செய்யுளும் கோத்திடுவோரையும் இணைத்து, அவர்களையும் தொழிலாளர்களாகவே மதித்துப் பாடுகிறார்.