பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம்; ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம்;... - தடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்; ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்... சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்... சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்.... கலை வளர்ப்போம்; கொல்லருலே வளர்ப்போம்... ஓவி&ம் செய்வோம்; நல்ல ஊசிகள் செய்வோம்; உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்! - இவ்வாறு கவிதையில் மட்டுமல்லாமல், டாரதி 'தாம்." எழுதிய பல கட்டுரைகளிலும் தொழில்வளர்ச்சி, வர்த்தகப் பெருக்கம் ஆகியவற்றின் அவசியத்தை வற்புறுத்தியுள்ளார்.

    • வருங்காலம்* (கட்டுரைகள் : சமூகம்) என்ற கட்டுரையில் -

அவர் பின்வருமாறு எழுதுகிறார் : <<உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக்கொண்டு வருகிறது என்பதைத் தமிழ் நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சிற்சில விவகாரங்களில் மனத்தைப் பதிய வைத்துக்கொண்டு, வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல், அற்ப விருப்பங்களிலும் அற்பச் செயல் களிலும் நாளையெல்லாம் கழியவிட்டு, கிணற்றுத் தவளைகள் போல் வாழ்வதிலே பயனில்லை, வர்த்தகம் செய்வோர் கோடிக்கணக்கான பணப்புழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த் தகங்கள் செய்ய வழி தேட வேண்டும்...., ராஜதந்திரிகளும் மந்திரிகளும் கண்டு வியக்கும்படியான பெரிய பெரிய யோசனைகள் செய்து நிறைவேற்றிப் புகழ் பெறவேண்டும். கைத்தொழில்களின் விஷயத்திலே நாம் இப்போது காட்டி வரும் சோர்வும் அசிரத்தையும் மிகவும் அருவருப்புக்கு இடம் தருகின்றன....நம்முள்ளே கல்வியும் செல்வமும் உ£ை..யோர் கூடி ஆராய்ச்சிகள் செய்து, வெளிநாடுகளில் ஆவலுடன் வாங்கக்கூடிய மாதிரிகள் எவை என்பதைக் கண்டுபிடித்து, அவற்றை' நமது தொழிலாளர்களைக் கொண்டு செய்வித்தால் மிகுந்த லாட்முண்டாகும். இரும்புத் தொழில் உலகத்திலே