பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 தெய்வமே! உனது தீப்பிழம்புகளும் இடி முழக்கமும் வானத் தைக் கிழிபடச் செய்கின்றன. கடகடத்து உருளும் உன் சக்கரங்களெல்லாம் வேகமும் பேரொலியும் மிகுந்த காம்பீரி யத்தோடு எதிரொலிக்கின்றன. எந்திரமே! உனக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். உனது . ஒரேயொரு மூர்க்கமான பாய்ச்சல் உலகத்தையே தூர்த்துத் துடைக்கும் வெற் றி கரமான அனற்பிழம்புகளை உருட்டி விட்டுவிடுகின்றது எந்திரமே! ஓ, எந்திரக் கட வுளே! உனது சக்தி உறுதியான கனி த்தாதுவை உருக்கிவிடுகிறது; பழம் பெரும் பாறையின் ஜீவனுள்ள 'வித்தையே: நொறுக்குகிறது; பண்டைக் காலத் தின் நிலையான பொருட்களையெல்லாம் உடைத்துத் தள்ளு கிறது. எல்லோரும் வாழ்த்துகிறார்கள்! எல்லோரும் வாழ்த்து கிருர்கள்! எந்திரமே!' நீ ஒரு கழுகு,' 'உனது கூரிய நகங்கள் பூமியின் குடடி உருவிப் பிடுங்கி, வெளியே விரித்துப் போடு கின்றன. எந்திரமே! எந்திரத் தெய்வமே! நீ ஒரு மேகம்; உனது நிழலின்கீழ் பூமியையும், வானத்தையும், கடலையும் இருளடிக்கச் செய்யும் பொல்லாத. புயல்கள்தான் தாவிப் பறக்கின்றன. எந்திரமே!. எந்திரமே! எல்லோரும் உன்னை வாழ்த்துகிறார்கள், நீயோ இரக்கமற்ற மந்திரவாதி; நீ பூதப் பொருள்களையெல்லாம் உன் இஷ்டப்படி கட்டுண்ண வைத் திருக்கிறாய். எந்திரமே!. எல்லோரும் உன்னை வாழ்த்து கிறார்கள்! நீயோ உலகத்தையே உனது பணயக் கைதியாகச் சிறைப்படுத்தியுள்ளாய். உனது சேவகர்களான நாங்களோ உன்னைத் தொழுகிறோம்...” - எந்திரங்களைக் கண்டு தாகூர் எவ்வளவு தூரம் பயந்திருக் கிறார்' என்பதற்கு இந்தப் பாடல் தக்க சான்றாகும் “'லெட்டுக் கனிகள் செய்து, தங்கம் முதலாம் வேறு பல பொருளும் குடைந்தெடுப்போம்" என்று பாரதி சுரங்கத் தொழிலை வர வேற்றுப் பாடுகிறார், தாகூருக்கோ அது பூமாதேவியின் குடலே உருவி மாலை போடும் கொலைகாரச் செயலாகத் தோன்றுகிறது ; எந்திரத்தின் வேகம் பூமியையே தூர்த்துத்

  • கங்கை -4