பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திமிங்கில உடலும் 'சிறிய புன்மதியும் , ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன் - . . தன் பணிக் கிசை, ஆ, என் தருங்கெலாம் அழிந்து , வாழ்ந்தான்.... என்று தம்மைத் தாமே நொந்து பாடியுள்ளார் (கவிதைக் காதலி). திலப்பிரபுத்துவத்தின் அகழிமுதலைச் சூழ்நிலை யிலே வாழ்ந்த பாரதி அதனை. நஞ்சென வெறுத்தார். தமது வறுமையையும் எண்ணிப் பார்க்காமல் ஆரம்பத் திலேயே அந்தச் சூழ் நிலையிலிருந்து தம்மைத்தாமே அறுத்துக் கொண்டு வெளியேறி, தேசத்தின் புதிய எழுச்சியோடும் விழிப்போடும் தம்மை ஐக்கியப்படுத்தித் தம்மைத் தாமே வளர்த்துக் கொண்டவர் பாரதி, நிலப்பிரபுத்துவத் தளையை முறித்து, அசுர வேகத்தில் முன்னேறத் துடித்தவர் அவர். எனவே நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தின் பல்வேறு கொடுமைகளையும் அவர் கண்டித்தார், இந்திய நாட்டில் எந்திர வளர்ச்சி ஏற்பட்ட வேண்டுமென த் துடித்தார். ஆனால் தாகூரோ ஜமீன் தாரிக் குடும்பத்தில் ஒரு குட்டி ஜமீன்தாராகப் பிறந்து வளர்த்தவர்.. பேராசிரியர் மாயூன்' சபீர் சொல்வது போல், " அந்தக் காலத்திலிருந்த பிராமண ஜமீன்தார்களிலிருந்து அப்படி யொன்றும் மாறுபடாத" ஜமீன் தாராகத்தான் அவர் வாழ்ந்து வந்தார். ஜமீன்தாரி வாழ்க்கையான அந்த நிலப் பிரபுத்துவத் தலையிலும் ஓரளவு சுகம் கண்டு, அதிலிருந்து விடுபடத் தயங்கியவர் அவர், எந்திர வளர்ச்சியோ நிலப்பிரபுத்துவச் சமுதாயத்துக்கு ஏகிரி ; அதன் 'சாவு மணி. அது - வளர வளர நலப்பரபுத்துவம் தனது பிடிப்பில் தளர்ந்து தளர்ந்து தானே மாண்டுபோகும். இது சரித்திரத்தின், பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத நியதி. எனவே ஜப்பானின் எந்திர வளர்ச்சியைப் பார்க்கின்ற தாகூருக்குத் தம்மையறியாமலே உள்ளுணர்வு உறுத்துகின்றது. அதனைத் “தமது 'சரீரத்துக்கு நேரும் பயம் போல" அவர். காண்கின்றார்; கண்டு அஞ்சுகிறார்.