பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்தின் பிரவேசம் மட்டும் காரணமல்ல. அன்னியச் சாமான் களின் பகிஷ்காரம் , போன்ற அம்சங்களைக் கொண்டு விளங்கிய, அன்றைத் தேதியில் முற்போக்கான அரசியல் இயக்கமாக விளங்கிய தீவிரவாதப் போக்கும் தாகூருக்குப் பிடிக்கவில்லை. சட்டசபை மோகம் கொண்ட காங்கிரசை முன்னா பழித்துப் பேசிய தாகூர், சட்டசபை மோகத்தை உதறித் தள்ளிவிட்டுத் தீவிரவாதம் பேசிய தலைவர்களையும் ஆதரிக்க முன்வரவில்லை, இந்தச் சந்தர்ப்பத்தைப் பற்றி அவரே. பின்னொரு முறை பின்வருமாறு எழுதினார் : நாட்டைப் பற்றி எதுவும் தெரியாத அறியாமையும், தாய் . நாட்டுக்குச் செய்யும் உண்மையான சேலையின்பால் அதீத மான அலட்சியமும் கொண்ட, தேசிய உணர்வின் சக்திசை செல்வரம் இழந்து விட்டதாகத் தோன்றிய, அந்தக் காலத்து அரசியல் இயக்கங்கள் ஊட்டிய மலிவான போதைக்கு என் மனம் இசைய மறுத்து விட்டது. எனக்குள் 15ரூம் என்னச் சுற்றி எங்கிலும் ஒரு மூர்க்கமான: புழுக்கமும், ' . *கிக்க வொண்ணாத அதிருப்தியும் என்னைச் சித்திரவதை செய்வதை உணர்ந்தேன். இந்தக் கால கட்டத்தில் தாகூரின் 125ன நிலை'. . எவ்வாறிருந்தது என்பதைப்பற்றி ட்டாக்டர் வி. எஸ். நாரவனே - (நிரந்தரப் பிரயாணி : "கட்டுரை எழுதியுள்ள வரிகள் நமது கவனத்துக்குரியவை : "எவ்வாறாயினும், பின்னர் தேசிய சுதந்திரம் பற்றிய தமது பார்வை அரசியல்வாதி : களின் பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அவர் கண்டறிந்தார். நாடு . அன்னியராட்சியில் உள்ள காரணத்தால், அறியாமை, சமூக அநீதி, மூட நம்பிக்கை ஆகிய வற்றை எதிர்த்துப் போரிடுவதை உதறித் தள்ளமுடியாது' என, அவர் நினைத்தார். அதி தீவிரவாத தேசியத்தின் ஆபத்தை அவர் உணர்ந்து கொண்டார். மேலும் அன்னி பத்துணி, அன்னியக் கலாசாரம் அல்லது அன்னிய ஸ்தாப் னங்கள் எதுவாக இருந்த போதிலும் அவற்றை விலக்கி விடுவது அல்லது ஒதுக்கி விடுவது என்ற கருத்தின் அடிப் படையில் மட்டும் உண்மையான சுயராஜ்யத்தை நிறுவி விட