பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிருந்தாலும், அன்று இந்திய நாட்டில் தலை தூக்கிய பயங்கர இயக்கம் பற்றி அன்றைய நிலையில் அவர் எத்தகைய " கருத்துக் கொண்டிருந்தார் என்பதை அறிய நமக்குத் தேவை! 'யான சான்றுகள் இன்னும் போதிய அளவுக்குக் கிட்டவில்லை. என்றாலும் அவர் தமது இறுதிக் காலத்தில் சென்னை ராஜ தானியில் அரசியல் வளர்ச்சி" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுத முனைந்து அரைகுறையாக வீட்டுப்போன ஒரு நூவில் இந்தியாவில் வெள்ளைக்காரப் பெண் மீது வெடிகுண்டு வீசிக் கொன்ற செயலைப் பற்றிப் பின்வருமாறு மனம் நொந்து எழுதியுள்ளார்; ' என்ன. காரியம் செய்தனர்! நவ் இந்தியா வில் உதயமாகியுள்ள ரஜபுத்திர வீரத்துக்கு என்ன இழுக்கு? என்ன தவறு! என்ன "தவறு...உன்னதமான வாழ்க்கையிலே ஊறித் திளைத்த இந்திய நாடும் உடனே 'கவனியுங்கள்! ஆரம்பமே அபசகுனமாயிருக்கிறது! " எனது நாட்டில் இவ்வியக்கம் வேகுன்றாது' என்று எச்சரித்தது.”. இவ்வாறு எழுதிவிட்டு, பின்னர், 'அவர் தமது சொந்த ஜில் காவான திருநெல்வேலியில் கலைக்டர் ஆஷ் துரையை வாஞ்சி ஐயன் மணியாச்சி ஸ்டேஷனில் சுட்டுக் கொன்றது, பற்றியும் எழுதி, இறுதியில், இதற்குப் பின் இம்மாதிரி இன்னொரு சம்பவம் நடைபெறவில்லை என்ற விஷயம் சென்னை ராஜதானிக்கே பெருமையளிக்கிறது. சென்னை : ராஜதானியில் புயங்கர இயக்கம் பிறக்கும் போதே உயிரற்ற பிண்டமாகப் பிறந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்... (பாரதி புதையல்-2). இதற்கும் முன்பாகவே" 1909-ம் ஆண்டிலேயே லண்டன் நகரத்தில் மதன்லால் திங்கரா என்ற இந்திய இளைஞன், கர்ஸான் வைலி என்ற், முன்னாளில் இந்தியாவிலிருந்த அதிகாரியைச் சுட்டுக் கொன்று, அதன் காரணமாகத் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்ற செய்தியைக் கேட்டு, நமது நாட்டிலுள்ள சிலர் திங்கராவின் செயலை வரவேற்றதைக் கண்டு, அற்பத்துக் கெல்லாம் சந்தோஷித்துப் பழிவாங்கும் இழிவான குணம் ஆரியர்களுடைய தல்ல. நமது நாட்டில் ஒருநாளும் கேட்டிருக்க முடியாத வெடிகுண்டு முதலிய பயங்கரமான