பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சில ஆண்டுகளுக்கு முன்னால் 'மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழா இந்திய நாட்டில் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டதை நாமறிவோம். இந்தச் சந்தர்ப்பத்தில் அகில இந்திய சமா தானக் கமிட்டியினர் உலகத்தின் பல்வேறு நாடு களைச் சேர்ந்த கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் வரவழைத்து, 1951-ம் ஆண்டின் இறுதியில் கல்கத்தா நகரில் மாபெரும். “தாகூர்..-கலை இலக்கியத் திருவிழா”* ஒன்றை நடத்தினார்கள். ஒன்றரை ஆண்டுக் காலம் திட்ட மிட்டு, சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவிட்டு, அந்த விழாவைப் பன்னிரண்டு நாட்கள் நடத்தினார்கள். அவ்விழா வுக்குச் சென்ற தமிழகத்து எழுத்தாளர்களில் நானும் ஒரு பிரதிநிதியாகச் சென்று, அதனைக் கண்டேன்; களித் தேன். விழாவுக்குப் பின்னர் வங்கத்திலுள்ள தமிழ்ப் பெருமக்கள் நடத்தி வரும் சங்கங்கள் எங்களுக்களித்த வரவேற்பில் பேசும்போது நான் பின்வருமாறு குறிப்பிட் டேன்: “தாகூர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்தவன் நான். இந்த அற்புதமான விழாவைக் கண்டேன்; களித்தேன். கவிஞரான் தாகூருக்குச் செய்யும் இத்தகைய கெளரவத்தைக் கண்டு, இந்தியன் என்ற முறையில் நான் பெருமை கொள்கிறேன், தமிழன் என்ற முறையிலோ பொறாமை கொள்கிறேன்! இவ்வாறு நான் குறிப்பிட்டபோது, சுப்ரமண்ய. பாரதியை மனத்தில் கொண்டுதான் நமது மகாகவி