பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 - தீவிரவாத தேசியத்தோடு கலந்து நின்ற பாரதி, அதே சமயத்தில் ஜாதிக் கொடுமைகள், சமூக அநீதிகள் ஆகிய வற்றையும் கண்டித்தே தமது பாடல்களை இயற்றினர். இதற்கு அவரது தேசியப் பாடல்கள் அனைத்துமே அருமை யான சான்றாகும். ஆனால், தாகூரோ இந்தக் காலத்துத் தேசியத்தின் பிற்போக்குத் தன்மையை மட்டுமே கண்டார். அதன் முற்போக்குத் தன்மையை உணரவும் ஏற்கவும் மறுத்து, தேசிய இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டார். காரணம் அவர் கவியாக இருந்து , தேசிய இயக்கத்தில் பங்கெடுத்தவர். பாரதியோ தேசிய இயக்கத்தாலேயே சிறந்த கவிஞராகப் பரிணமித்தவர். . . . . . ' தீவிரவாத தேசியம் பற்றி பண்டித நேரு அது சமயத் தேசியம் என்பதில் ஐயமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் (சுய சரிதை). இந்தக் கூற்றும் உண்மைதான். தீவிரவாத தேசியத் தலைவர்கள் பொதுவாக இந்து மத தாக்கத்தையும், இந்து சாம்ராஜ்யப் பெருமையையும் நிலை நாட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். தயானந்த சரஸ்வதி தோற்றுவித்த ஆரிய சமாஜக் கொள்கைகளில் பெரிதும் ஈடுபாடு கொண்ட தீவிரவாதத் தலைவர் லஜபதிராய்; திலகர் சிவாஜி மன்னரின் பெருமைகளைக் கூறி இந்து சாம்ராஜ்யக் சனலை வளர்த்தார்; அரவிந்தர், விபின சந்திரபாலர் முதலான வங்கத் தலைவர்களோ காளி மாதாவையும் பாரத தேவியையும் ஒன்றாகவே சித்திரித்தார்கள், தேசிய இயக்கத் தில். இத்தகைய மதச்சார்பான போக்கு தென்படுவதைத் தாகூர் கண்டார்; அதனைச் சுட்டிக்காட்டி, அவர் அந்தத் தலைவர்களை எச்சரித்தார், மக்கள் மத்தியிலே தேச பக்தியையும், வீர வுணர்ச்சியையும் உருவேற்றுவதற்காக, தீவிரவாத தேசியத் தலைவர்கள் சிவாஜி திருநாள்”

  • முதலியவற்றைக் கொண்டாடும்படி அறைகூவல் விடுத்தார்

கள்; பவானி பூஜை நடத்துமாறு கோரினார்கள். சிவாஜி திருநாள் கொண்டாடுவதைத் தாகூர் வரவேற்றார். அதனைக் கொண்டாடுவதன் மூலம் இந்திய நாட்டின் விழிப்புற்ற தில் இத்த ஒன்றாகவே இருந்தா காளி மாதா