பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 தெய்வீக குணங்களமைந்த புருஷனும் உடல்கத்தில் இருக் கிறனாவென்று யோசிக்க வேண்டியதா யிருக்கிறது. இவருடைய எதிரிகளான புலிகளுக்குத் தர்ம வாசனை சிறிதேனும் கிடையாது. அவர்கள் பூர் காந்தியை விட்டு விடுவார்களா? ஒரு நாளுமில்லை ஆனால் இடைசியாக ஜயம் ஸ்ரீ காந்தி பwம்தான் என்றும் எழுதியுள்ளார் (பாரதி புதையல்-2). தென்னாப்பிரிக்க இந்தியர் போராட்டம் முதலியவற்றை முடித்துக் கொண்டு, புகழ் வாய்ந்த, புடம் போட்ட அறப் போர் வீரராக, காந்தியடிகள் 1915ம் ஆண்டில் இந்தி யாவுக்கு வந்து சேர்ந்தார். அதே ஆண்டில் அவர் தாகூரின் சாந்தி நிகேதனுக்கும் விஜயம் செய்தார். காந்தியடிசுவின் தென்னாப்பிரிக்கத் தியாக வாழ்வைப் பற்றி அறிந்திருந்த தாகூர் அந்தச் சமயத்தில் தான் அவரை "மகாத்மா" என்று குறிப்பிட்டார். தாகூர் இட்டழைத்த இந்தப் பெயரே பின்னர் காந்தியடிகளைக் குறிப்பிடும் காரணப் பெயராக நிலைத்துவிட்டது. காந்தியடிகளை "மகாத்மா' என்று குறிப்பிட்டுத் தாகூர் கூறிய சொல் தமிழ் கத்துக் கவிஞரான பாரதிக்கும் இனிமையாக இருந்தது. எனகே .பாரதி தாம் பாடிய "பாரத மாதா நவரத்தின மாலையில், இன்ப வளம்செறி பண்பல இயற்றும் கவீந்திர னாகிய ரவீந்தி; நாதன் சொல்றது கேளீர் ! புவிமிசை இன்று : மனிதர்க் கெல்லாம் தலைப்படும் மனிதன் தர்மமே உரு வாம் மோஹன தாஸ் கர்ம சந்திர காந்தி என்றுரைத்தான் ! என்று அதனை விதந்தோதி வரவேற்றுப் பாடினார். காந்தியடி களும் தாகூரும் ஒருவர் மீதொருவர் மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவர்கள் என்பது பிரசித்தம். எனினும், காந்தியடிகளின் அரசியல் நோக்கையும் போக்கையும் பாரதி