பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

குறிப்பிட்டேன். பாரதியின் பெருமையை நாம் பூரணமாக உணரவும் இல்லை, உலகுக்கு உணர்த்தவும் இல்லை என்பதே . என் கருத்து. இந்த எண்ணத்தில் எழுந்த தர்மாவேசமான பொறாமை உணர்ச்சியே என்னுள் கிளர்ந்தது. இந்தப் பொறாமையுணர்ச்சியில் நியாயத்தன் மையும் உண்டென நான் கருதுகிறேன். சொல்லப்போனால் அந்த நியாயத் தன்மையை வலியுறுத்தும் சிறு முயற்சியே இந்நூல் எனலாம், ஆம், இந்த நூல் இந்திய நாடு கண்ட, இரு பெரும் தேசிய மகாகவிகளான தாகூரையும் பாரதி யையும் ஒப்பு நோக்குகின்ற ஒரு விமர்சனமேயாகும். மேலும் பாரதியைப் பற்றி நான் எழுதத் திட்டமிட்டுள்ள நூல் வரிசையில் இதுவும் ஒன்றாகும். பாரதியின் புதுமையும் புரட்சியும் மிகுந்த கவிதைகளுக்கு முதற் பெரும் ஞான் பிதாவாக விளங்கும் ஷெல்லியையும், பாரதியையும் ஒப்பு நோக்கும் எனது நால் (பாரதியும் ஷெல்லியும் ஏற்கெனவே வெளிவந்துள்ளது.

தாகூர், பாரதி ஆகிய இரு, பெருங் - கவிஞர்களிடமும், எனக்கு இளமை முதலே மிகுந்த ஈடுபாடும் மதிப்பும் உண்டு. மேற்குறித்த தாகூர் நூற்றாண்டு விழா நடை பெற்ற 1961-ம் ஆண்டில் நான் தாகூரின் நூல்களை மீண்டும் ஒருமுறை படிப்பதை எனது அவ்வாண்டுக் கடமைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தேன். அத்துடன் தாகூரைப் பற்றி வெளிவந்துள்ள நூல்களையும் விமர்சனங் களையும் தேடிப் பிடித்து படித்து வந்தேன். அவ்வாறு படிக்கும்போதே, " தாகூரையும் பாரதியையும் ஒப்பு ேநாக்கி ஆராய்ந்தும் வந்தேன், இதனை அறிய வந்த எனது மதிப்புக்குரிய, தலை சிறந்த பாரதி அன்ப ரான அமரர் ஜீவா அவ்விருவரையும் ஒப்பு நோக்கித் தமது "தாமரைப்" பத்திரிகையின் பாரதி மலருக்கு ஒரு கட்டுரை எழுதுமாறு என்னைக் கேட்டுக்கொண்டார். எனவே அந்தப் பத்திரிகையின் பக்க வரம்பு அனுமதிக்கும் அளவுக்குத் 'தாகூரும் பாரதியும்' என்று தலைப்பில் ஒரு சிறு