பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 பட்ட புதிய திட்டத்தை மிகுந்த உற்சாகத்தோடு முற்றிலும் ஏகமனதாக ஏற்றுத் தீர்மானமாக நிறைவேற்றினார்கள், காங்கிரஸின் கொள்கை மாறியது. சட்ட ரீதியான மார்க்கங் களில் * சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிய குடியேற்ற நாட்டின் சுயாட்சியாக, அது இனியும் இருக்கவில்லை; மாறாக, 'சமாதானமான, நியாயமான முறைகளின் மூலம் சுயராஜ் "அபத்தைப் பெறுவது' என மாறியது. காங்கிரஸ் தா பனம் அதன் முன்னைய கட்டுப்பாடற்ற குணத்தைக் கைவிட்டது; அந்த ஆண்டில் நிரந்தர தீர்வாகக் குழு அங்கத்தினர்களாகப் பதினைந்து பேர் கொண்ட ஒரு காரியக் கமிட்டியையும், எல்லா வட்டாரங்களிலும் எட்டும்ன வுக்கு' ஆங்காங்கே காய் ரெ ஸ்தாபனங்களையும் அமைக்கும் திட்டத்தோடு, ஒரு நவீன காலக் கட்வீன் தன்மைகளை அது தரித்துக் கொண்டது. காங்கிரஸ் அதன் பழைய காலிட்டி 'பெரிய மனிதத் தன்மைக்குக் கும்பிடு போட்டு வழியனுப்பிவிட்டது. தேச சுதந்திரத்தை எய்து வதற்காக, அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் போராட்ட டத்தில்: அது வெகுஜனங்களின் தலைவனாக விளங்கியது. ஒன்றுபட்ட, போர்க் குணம் மிக்க தேசிய இயக்கத்தின் கேந்திரமாக மாறியது. (இந்தியா சுதந்திரத்துக்காகப் போராடுகிறது -ஹிரேன் முகர்ஜியின் நூல்). 1920-ம் ஆண்டின் இறுதியில் நடந்த இந்த மாநாட்டுக்குப் பின்னர் 1921-ம் ஆண்டின் ஆரம்பத்தி லேயே ஒத்துழையாமை இயக்கம் சூடு பிடித்துவிட்டது. அதற்குமுன், இந்திய சரித்திரம்" என்றுமே கண்டிராத அளவுக்கு விரிந்து பரந்த வெகுஜன இயக்கமாக, அந்த இயக்கம் அந்த ஆண்டு முழுவதுமே நிகழ்ந்தது; இந்திய சரித் திரத்திலேயே புதியதொரு பூரிப்பூட்டும் அத்தி 2. பாயம் 'தெடங்கப் பெற்ற காலம். இது; காந்தியடிகள் இந்திய நாட்டின் ஒப்பற்ற தலைவராக உருமாறிய காலம் இது.