பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, , . , . , , , இத்தகைக் கால கட்டத்தில் நமது இரு பெருங்கவிஞர் களும் எத்தகைய கருத்துக்களைத் தெரிவித்தார்கள் ? பாரதியைப் பொறுத்த வரையில், காந்தியடிகள் இந்தியா வுக்கு வருமுன்பே, 1909-ம் ஆண்டிலேயே, இந்திய தேசிய காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதியான நபர் காந்தியடிகள்தான் என்பதைத் தீர்க்கதரிசனம் போல் கண்டு, அதனை 'ராஜதந்திர {[ முறைமையில், நல்ல ஸ்கஷ்மமான புத்தியுடன் யோசித்துப் பார்த்துக் கூறிவிட்டார். இவ்வாறு துெடிது (நோக்கும் அரசியல் தெளிவும் தீக்ஷ ண் வழும் பாரதியிடமிருந்தது என்பதை நாம் காண்கிறோம். காந்தியடிகளைக் காங்கிரஸ் அக்கிராசனாதிபதியாகக் காணப் பாரதி கண்ட கனவு, பாரதியின் மறைவுக்குப் பின்னர் 1924-ம் ஆண்டில் தான் பலிதமாயிற்று. எனினும் காந்தி அடிகள் மக்களின் அபிமானத்தையும், தலைவர்களின் அங்கீகா ஒத்தையும் பெற்ற தலைவராக விளங்குவதைப் பாரதி தம் வாழ்நாளிலேயே கண்டுவிட்டார். சத்தியாக்கிரக இயக்கத் தைத் தொடங்குவதற்கு முன்னர் காந்தியடிகள் சென்னை வந்திருந்தபோது, பாரதி அவரை நேரில் சந்தித்து, அவர் தொடங்கப்போகும் - இயக்கத்தை "ஆசீர்வதிக்கவும்” (செய்தார் என்று பார்க்கிறோம். மேலும் பயங்கர இயக்கம், 8.Jலாத்காரம் ஆகியவற்றை இந்தியப் பண்புக்கே விரோத மான அநாகரிகமான செயல்கள்” எனக் கருதிய பாரதி, காந்தி -டிகரின் ஒத்துழையாமை இயக்கத்தின் சாராம்சத்தை. எடுத்த எடுப்பிலேயே நன்கு உணர்ந்து கொண்டார். இந்திய நாட்டுக்குக் காந்தியடிகளின் மார்க்கமே உகந்தது என்றும் கருதினார். எனவே தான் அவர் காந்தியடிகளை, வாழ்விக்க வந்த காந்தி” என வாயார வாழ்த்தினார். காந்தி & ட்டிடகரைச் சஞ்சீவி கொணர்ந்த அனுமனைப் போலவும், இடி மழையிலிருந்து காப்பாற்ற, கோவர்த்தன கிரியைக் குடை யாகப் பிடித்த கண்ணனைப் போலவும் 'கருதினார். நெருங்கிய , ப்யள்சேர் - "ஒத்துழையாமை' தெறியினால், இந்தியாவுக்கு வருங்கதி கண்ட” மகாதீபமாவாகக் கண்டார். (மகாத்மா காந்தி பஞ்சகம்).