பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கரத்திசொல் கேட்டார், கண் பார் விடுதலை கணத்தினுள்ணே! என்றும் (பாரத - மாதா நவரத்தின மாலை). அவர் 8உ தி கூறினார், ஆனால் தாகூரோ பாரதியைப் போல் ஒத்துழையாமை இயக்கத்தின் தன்மையை உணரவில்லை. 1919-ம் ஆண்டில் பஞ்சாப் படுகொலை நிகழ்ந்த சமயத்தில், அவர் ஆங்கிலேய அரசாங்கம் தமக்கு வழங்கியிருந்த 'சர்' பட்டத்தை கூறித் தள்ளி, தமது ஆழ்ந்த மனிதாபிமானத்தையும் தர்மாம்சத் தையும், தேச பக்தியையும் புலப்படுத்தினார். அத்தப். பட்டத்தைத் துறந்த காலத்தில் 'அவர் பின்வருமாறு : தெரிவித்தார் : "கெளரவப்பட்ட சின்னங்களெல்லாம், அவமானம் தரும் அபத்தமான சந்தர்ப்பத்தில் எங்களது வெட்கக்கேட்டை வெளிச்சமிட்டுக் காட்டும் காலம் வந்து விட்டது. எனவே, அற்பமானது என்று சொல்லப்படும் தமது நிலைமையினால், மனிதப் பிறவிகளுக்கே பொருந்தாத ஓர் இழிவை அனுபவிக்க நேர்ந்துள்ள என் நாட்டு மக்களின் புக்கமாக, நான் எல்லாப் பிரத்தியேகமான கௌரவங்களையும் து ஐந்துவிட்டு, என் பங்குக்கு நிற்க விரும்புகிறேன்.” இவ்வாறு கூறித் தமது பட்டத்தைத் துறந்து தமது “ நாட்டு மக்களின் பக்கமாக நிற்க விரும்பிய” தாகத் தெரிவித்த போதிலும், பஞ்சாப் படுகொலையின் பின்விளைவாகத் தோன்றிய தேசிய எழுச்சியிலும், ஒத்துழையாடை இயக்கத். திலும் தாகூர் நிற்க விரும்பவில்லை. காந்தியடிகள் தொடங்கிய கைராட்டை இயக்கத்தின் சுதேசிய சாராம்சத்தை உணராமல், தாகூர் அதனை நிராகரித்தார். ஒத்துழையாமை இயக்கக் காலத்தில் அவர் காந்தியடிகளின் கருத்தோடு பகிரங் கமாக மாறுபட்டு நின்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் காந்தியடி களுக்கும் தாகூருக்குமிடையே நடந்த பகிரங்கமாக விவாதங்கள் சரித்திரப் பிரசித்தமானவை. இதனைக் குறித்து, ஹிரேன் முகர்ஜி எழுதியுள்ள வரிசள் அன்றைய சந்தர்ப்