பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R4 தாகூர் கவிதையாலான “தந்தக் கோபுரதி" -தில் வாழ்ந்த காரணத்தால் அவர் பறந்து : இசைபாடும் பறவைகளைக் கண்டார்; காந்தியடிகளோ பூமிப் புழுதியில் காலூன்றி நின்றதால், உணவற்று, உறக்கமற்று, பறக்கவும் சீவனற்றுப் பரிதாபமாகக் கிடக்கும் லட்சோப லட்சக் கணக்கான பறவை களைக் கண்டார். இதனால் தான். தாகூர் காந்தியடிகளின் தேசி. இயக்கத்தின் தன்மையை உணரத் தவறிவிட்டார், இதற்குக் காரணம் தாகூரின் தனிமனிதத்துவத் தன்மையின் பிடிப்புத்தான். எனவே தான் வெகுஜன இயக்கமென்பது அவருக்கு வெறும் குரோத பாவத்தின் கொடுமையாகப் 2.பட்டது. . * “ஒத்துழையாமை இயக்கம் பற்றிய அவரது போக்காக விமர்சனம் செய்து, 1922-ம் , ஆண்டில், ஒரு குஜராத்திக் கவிஞர் தாகூருக்கு எழுதிய பகிரங்கக் கடிதத் துக்குப் பதிலளிக்கும் போது, தாகூர் தமது கருத்தைப் பின் வருமாறு தெளிவாகத் தெரிவித்தார்; ** எனது சக்திகளின் pravலைகளை நான் முற்றாகத் தெரிந்திருப்பதால், கட்டுப்படுத் துவது எவ்வாறு என்பதை நான் கண்டு கொள்ள மாட்டாத , குருட்டுச் சக்திகளின் விஷயத்தில் என்றும் ஈடுபடத் து யாமல், எனது சொந்தத் தொழில் என நான் கருதுவ துடனேயே என்னைக் கட்டுப்படுத்தி நின்று கொள்கிறேன்.” (தாகூரும், ரோலந்தும்-டாக்டர் கிரிஜா முகர்ஜி: கட்டுரை). ஆம், காந்தியடிகளின் தலைமையில் விழிப்புற்றெழுந்த வெகுஜன இயக்கத்தை, தமது 'கூட்டம் மனோபாவம்' பற்றிய கருத்தின்படியே, குருட்டுச் சக்திகள்”. என மதிப்பிட்டு விட்டார் தாகூர். ஆனால் பாரதியோ காந்தியடிகளின் தேசிய இயக்கப் பிரவேசத்தை, “வீடிவிலாத் துன்பம் செய்யும் பராதீன் லெம்பிணி" யகற்ற வந்த பரிதியொளியின் வரவாகக் காண்கிறார். காந்தியடிகளுக்கும், தாகூருக்கும் இவ்வாறு கடுமையான விவாதம் நடந்து வந்த காலத்தில், பாரதி தமது ஆயுள் முடிந்து அமரராகி விட்டார், தாகூருக்கும் காந்தியடி.களுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமையைப் பற்றி,