பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 பண்டித நேரு கூறியுள்ள சில வரிகளும் நமக்குத் தாகூரைப் புரிந்து கொள்ள உதவும் : ""பாட்டாளிகளின்பால் அனுதாபம் கொள்ளும் ஜனநாயகவாதியாக மாறிய பணக்கார வர்க்கக் கலைஞரான தாகூர், முக்கியமாக இந்தியாவின் கலாசார மரபை, வாழ்க்கையை அதன் முழுமையோடு ஏற்று, அதன் மூலம் அதில் பாட்டோடும் நாட்டியத்தோடும் வாழும் மரபைப் பிரதி நிதித்துவப் படுத்தினர். பெரிதும். மக்கள் கண் மனிதரான ஏறத்தாழ இந்திய விவசாயியின் திர களேட வடிஷ் மான. காந்தியோ, இந்தியாவின் மற்றொரு பழமையான மரபை, பற்றறுத்தலும் துறவு வாழ்க்கை வாழ்வதுமான மரபைப் பிரதிநிதித்துவப் படுத்தினர். எனினும் பிரதான் மாக, தாகூர் ஒரு சிந்தனை யாளர்; காந்தியோ முனைப்பு மிகுந்த ஓய்வறியாது, செயலாற்றும் மனிதர்." (இந்திய தரிசனம்: நேரு). பாரதிக்கு அரசியல் துறையில் தீர்க்க தரிசன மான திருஷ்டி இருந்ததைப் போலவே, பொருளாதாரத் துறையி லும் இந்தியாவின் எதிர்காலம் பற்றிய ஓர் லட்சியம் இருந் தது. ஆம், பொருளாதாரத்துறையில் பாரதி சமத்துவத்தை நாடும் கவிஞராகவும், அதைப்பற்றித் தெள்ளத் தெளிவான கருத்துக்கள் கொண்டவராகவும் இருந்தார். இந்திய நாடு அரசியல் சுதந்திரம் பெற வேண்டியது முதல் தேவை; அந்தத் தேவை பூர்த்தியாக வேண்டுமென்பதற்காக, அவர் அரசியல் லும் தம் பங்கைச் செலுத்தினார். அதே சமயம் அரசியல் சுதந் திரத்தோடு இந்திய விடுதலை பூரணமாகி விடுமென அவர் கருதவில்லை. மனிதர்களிடம் எல்லாவிதத்திலும் சமத்துவம் நிவவ வேண்டும், சுரண்டலும் கொள்ளையும் ஒழிய வேண்டும், பொருளாதார சமத்துவம் ஏற்பட வேண்டும் என்றெல்லாம் வேட்கை கொண்டவர் அவர். அதனால் தான் தமது *'வந்தே. மாதர கீத"த்திலேயே அவர், எப்பதம் வாழ்த்திடு மேலும் நம்மில் யாவர்க்கும் அந்தநிலை பொது வாகும்;