பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - 87. ' எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-தொய்படும். ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே ... என்றும் அவர் சொல்கிறார். இறுதியிலோ, சமத்துவ வாழ்க்கையான லட்சிய மார்க்கக் கோஷங்களை வரையறுப் பதுபோல், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்--வீரில் -- உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்---வெறும் வீணருக் குழைத்துடலம் ஓயமாட்டோம்! என்று உத்வேகத்தோடு முழக்கமிடுகிறார். இவ்வாறு தீம்.ஆர். கவிதைகள் பலவற்றிலும் மார தி சமத்துவக் கொள்கையை வற்புறுத்தியுள்ளதை நாம் பரக்கக் கா என்ன லாம். இத்தகைய கருத்துக்களையெல்லாம், அவர் ஏதோ ஒரு கவிதா ஆவேசந். தில், உணர்ச்சி வேகத்தில் கூறிவிட்டார் என்றும் எவரும் நினைக்க வேண்டியதில்லை. எந்த வித ஆவேச,டிவம், உணர்ச்சி . வேகமும் இல்லாமல், நின்று நிதானித்து எழுதியுள்ள கட்டுரைப் பகுதிகளிலும் அவர் சகலத்துவக் கொள்கையை !ப், பற்றிய தமது திட்டவட்டமான கருத்துக்களைத் தெரிஷத் துள்ளார். அவற்றிலிருந்து அவர் அந்தக் கொள்கையைப் பற்றிக் கொண்டிருந்த தெளிவு நமக்கு எளிதில் புலப்படும், அவற்றில் சிலவற்றை மட்டும் நாம் இங்கே பார்ப்போம், 'ஸமத்துவம் என்பது யாது?” என்ற உபதலைப்பிலேயே அவர் ஒரு சிறு குறிப்பு எழுதியுள்ளார் (கட்டுரைகள் ; கலைகள்). அது வருமாறு : - ஸமத்துவக் கொள்கையிலே இரண்டு செய்திகளைப் பற்றிய விசாரணை உண்டாகிறது. முதலாவது, செல்வத்தை உண்டாக்குதல்; இரண்டாவது அதைப் பங்கிட்டுக் கொடுத்தல். முதலாவது செய்தியில், தொழிலைப் பற்றிய ஆராய்ச்சி ஏற்படுகிறது. இரண்டாவது செய்தியில் கடவு ளைப் பற்றிப் பேச்சு, '