பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரை எழுதினேன். அதில் நான் கண்ட பிரதானமான முடிவுகளையெல்லாம் தொட்டுக் காட்டத்தான் முடிந்தது. இதன் பின்னர் அதே ஆண்டில் எட்டையபுரத்தில் நடந்த பாரதி விழாவிலும், வேறு பல இடங்களில் நடந்த விழாக் களிலும் இதே விஷயத்தைக் குறித்துச் சொற்பொழிவாற்றி னேன், அந்தக் கட்டுரையையும், சொற்பொழிலையும் இலக்கிய அன்பர்கள் நன்கு வரவேற்றார்கள். மேலும், அவர் 'களில் பலரும் எனது விமர்சனத்தை விரிவாக எழுதுமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்தத் தூண்டுதலின் விளைவே இந்நூல். ""? : '... '.. பாரதியையும் தாகூரையும் மிகவும் விரிவாக ஆராய்ந்து இருவரின் பல்வேறுபட்ட படைப்புக்களையும், பக்குவப் பாட்டையும், ஒப்புநோக்கிப் பெரியதொரு நூலை ஆக்கு இதற்கு விஷயமும் உண்டு; அதற்கான அவசியமும் உண்டு., அந்த அளவுக்கு விரிவாக எழுத ஆர்வம் இருந்தாலும், 'இந்த நூல் எனது இலக்கிய திருஷ்டி, காலக் குரலோடு ஒட்டிக் கவிதைப் படைப்பைக் காணும் கண்ணோட்டம் ஆகிய வற்றின் நோக்கில் சில பிரதானமான விஷயங்களை மட்டும் சுட்டிக்காட்டும் விமர்சனமாகவே அமைந்துள்ளது எனலாம். பாரதியாரைப் பொறுத்த வரையில் அவர் இலக்கிய கர்த்தா வாக மட்டுமல்லாமல் அரசியல் வாதியாகவும் திகழ்ந்தார். 'நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்குழைத்தல்' என்ற அவரது மணிவாக்கில் அவர் இலக்கியத்தையும் அரசிய லையும் இணைத்தே காண்கிறார். இந்த வாக்குக் கொப்பு!, அவரிடத்தில் நாடும் மொழியும், அரசியலும் இலக்கியமும் பின்னிப் பிணைந்தே இருந்தன. அவற்றைப் பிரித்துக் காண்பதற்கில்லை. காண முயல்வது பாரதியை உடல்வேறு. "உயிர்லேறு எனப் பிரித்து, வைத்து ஆராய்வது போலத்தான் இருக்கும். இந்த உண்மையை நெஞ்சில் நிறுத்திக் கெண்டுதான் நான் இந்த ஒப்பு நோக்கு விமர்சனத்தை எழுதியுள்ளேன். - இதுவே இந்த விமர்)