பக்கம்:கடற்கரையினிலே.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார்

101


கின்றார்; உலாவுகின்றார்; குலாவுகின்றார்.அவரைக் கண்டு அஞ்சி, நம்மவர் நெஞ்சம் குலைகின்றாரே ! சிப்பாயைக் கண்டால் அச்சம்; துப்பாக்கியைக் கண்டால் நடுக்கம்: சட்டைக்காரனைக் கண்டால் குட்டிக்கரணம். இப்படி வாழ்வதும் ஒரு வாழ்வாகுமா? பிறந்த நாட்டில் பிறர்க் கடிமை செய்தல் பேதைமை யன்றோ?

"அறப்பெருங் கடலே ! விர சுதந்தர வேட்கை இந்நாட்டிலே வேரூன்றிவிட்டது. இனி அதை அசைக்க எவராலும் ஆகாது. வந்தேமாதரம் என்ற மந்திர மொழியால் பாரத நாட்டைத் தட்டி எழுப்பிய பாலகங்காதர திலகரை அரசாங்கத்தார் சிறையில் மாட்டலாம். தென்னாட்டுத் திலகர் என்று பேர் பெற்ற எங்கள் சிதம்பரனாரைச் சிறைக் கோட்டத்தில் அடைக்கலாம்; செக்கிழுக்க வைக்கலாம்; துச்சமாக எண்ணித் துாறு செய்யலாம். ஆயினும், அவர் மூட்டிய கனல் வெள்ளையர் ஆட்சியை விரட்டியே தீரும் !

" சொந்த நாட்டில் பிறர்க்கடி மைசெய்தே
துஞ்சிடோம் இனி - அஞ்சிடோம்"

என்ற வீர சுதந்தர வேகத்தை நிறுத்த யாரால் முடியும்? எரிமலையைத் தடுக்க - அதன் வாயை அடைக்க - எவரா இயலும்?

"செந்தமிழ்க்கடலே ! இக்கரையிலே கொஞ்சம் இடம் வேண்டும் என்று கெஞ்சிய வெள்ளைக்காரன் இன்று மிஞ்சிவிட்டான்; கோட்டை வளைத்தான்; நமக்குக் கேட்டை விளைத்தான்; இந்நகரை வெள்ளையர் பாக்கம் என்றும், கறுப்பர் பாக்கம் என்றும் பிரித்தானே; வெள்ளையர் மேலோராம்; கறுப்பர் கீழோராம்;