பக்கம்:கடற்கரையினிலே.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கடற்கரையிலே


வளமே யன்றோ? இத்தகைய வளநாட்டில் 'தரும தேவதைபோல் விளங்கும் வள்ளல் தழைத்து ஓங்கி வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.

"கலைமணக்கும் தலைநகரே ! செந்தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் சொந்தம் மிகவுண்டு. ஈழநாட்டு ஆதியரசருள் ஒருவன் பாண்டி மன்னன் திருமகளை மணந்து வாழ்ந்தான். சேரநாட்டரசன் வஞ்சி மாநகரில் நடத்திய கண்ணகி விழாவில் இந்நாட்டுக் கஜபாகு மன்னன் கலந்துகொண்டான். அன்றுதொட்டுக் கண்டி முதலாய பல நகரங்களில் பத்தினித் திருநாள் நடைபெற்று வருகின்றது; அன்றியும் இந்நாட்டுக் கடற்கரையிலுள்ள காண மலையில் திருக்கோயில் அமைத்து அதைத்


1. "இரவு நண்பகல் ஆகி லென்பகல்

இருளறா இர வாகிலென்,
இரவி எண்திசை மாறி லென்கடல்
ஏழும் ஏறிலென், வற்றிலென்?
மரபு தங்கிய முறைமை பேணிய
மன்னர் போகிலென்; ஆகிலென்?
வளமை இன்புறு சோழ மண்டல
வாழ்க்கை காரண மாகவே
கருது செம்பொனின் அம்ப லத்திலே
கடவுள் நின்று நடிக்குமே !
காவி ரித்திரு நதியி லேஒரு
கருணை மாமுகில் துயிலுமே
தருவு யர்ந்திடு புதுவை யம்பதி
தங்கு மானிய சேகரன்,
சங்க ரன்தரு சடையன் என்றொரு
தரும தேவதை வாழவே !"

- பெருந்தொகை - 1935

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/54&oldid=1247644" இலிருந்து மீள்விக்கப்பட்டது