பக்கம்:கடற்கரையினிலே.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19. சிதம்பரனார்

தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி அந்நாளில் எந்நாட்டாரும் அறிந்த துறைமுக நகரம். அந்நகரின் பெருமையைத் தம் பெருமையாக்கிக் கொண்டார் சிதம்பரனார். அவர் தந்நலம் துறந்த தனிப்பெரும் தொண்டர். அன்னார் செய்துள்ள சேவையை நினைத்தால் உடல் சிலிர்க்கும்; உயிர் நிமிர்ந்து உணர்ச்சி பொங்கும்; உள்ளமெல்லாம் நெக்கு நெக்காய் உருகும். 'இந்தியக் கடலாட்சி எமதே' எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறி மயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார். தென்னாட்டுத் திலகர் எனத் திகழ்ந்தவர் அவர். பாட்டாளி மக்களுக்குப் பரிந்து பேசியதற்காக - நாட்டிலே சுதந்தர உணர்ச்சியை ஊட்டியதற்காக - அவரைச் சிறைக்கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில அரசாங்கம். சிறைவாசம் தீர்ந்த பின்னர்த் துரத்துக்குடிக்குத் திரும்பினார் சிதம்பரனார்; ஒரு நாள் மாலைப் பொழுது !துறைமுகத்தின் அருகே உலாவச் சென்றார். பழைய நினைவுகள் எல்லாம் அவர் மனத்திலே படர்ந்தன. அக்கடற்கரையிலே நின்று அவர் பேசலுற்றார்:

"தென்னாட்டுத் துறைமுகமே ! முந்நூறு ஆண்டுகளாக நீயே இம்முத்துக் கரையில் முதன்மை பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/93&oldid=1247681" இலிருந்து மீள்விக்கப்பட்டது