பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17
      உடனேயே, தலையைத் தாழ்த்தி, மார்பில் மிளிர்ந்த உலோகத் தகட்டைப் பார்த்துப் புன்னகை புரிந்தான் அவன்.
      "ஆமாம். எலும்போடு எலும்பாய் ஊறிப்போகிறவரை எல்லா வேலையுமே கஷ்டமானதுதான். பிறகு நாம் அதைக் காதலிக்கக் கற்றுக்கொள்கிறோம். அப்புறம் அது நமக்கு உள்ளக் கிளர்ச்சி உண்டாக்குகிறது. கஷ்டமானதாயிருப்பதில்லை. ஆனால் அது லேசான விஷயமல்ல.”
      சூரியனை நோக்கிச் சிரித்துக் கொண்டே மெதுவாகத் தலையசைத்தான் அவன். திடீரென்று சுறுசுறுப்படைந்து அவன் தன் கையை வீசினான். அவனது கரிய கண்கள் மினுமினுத்தன.
      "சிலசமயம் அது கொஞ்சம் பயங்கரமானதாகத்தானிருந்தது. மண்ணுக்குக்கூட ஏதோ ஒருவகை உணர்ச்சி இருக்கத்தானே வேண்டும்; இல்லையா, நீ என்ன நினைக்கிறாய்? ஆழக் குடைந்து தோண்டி மலைப்பரப்பிலே பெரியகாயம் விளைவித்தபோது, ஆங்கே உள்ளேயிருந்த பூமி ஆங்காரத்தோடு எங்களை எதிர்த்தது. அதன் மூச்சு சூடுற்றிருந்தது. எங்கள் இதயங்கள் குவித்தன; தலைகள் கனத்தன; எலும்புகள் வலித்தன. இதை எத்தனையோ பேர் அனுபவித்துவிட்டார்கள். பிறகு அது எங்கள் மீது கற்களே வீசி எறிந்தது; கொதிநீரால் எங்களைக் குளிப்பாட்டியது, மிகவும் கோரமானது அது. சில சமயம் அங்கு வெளிச்சம் பட்டுத் தெறிக்கையில், அந்த நீர் சிவப்பாகத் தோன்றும். அப்பொழுதெல்லாம், நாம் பூமியைக் காயப்படுத்திவிட்டோம், அது தன் ரத்தத்தினால் கம்மை மூழ்கடித்துப் பொசுக்கிவிடும் என்று என் தந்தை சொல்வார்! நிச்சயமாக அது வெறும் கற்பனைதான். ஆனாலும், பூமிப்பரப்பினுள்ளே ஆழ்ந்த இடத்தில், மூச்சுமுட்ட வைக்கும் அந்தகாரத்திலே, துயரத்துளிகள்போல் தண்ணீர் சொட்டிக் கொண்டிருக்கையில், இரும்பு கல்லைத் துருவித் துளைக்கும்