பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
      "இப்படி நினைத்தது அவர் ஒருவர் மாத்திரமல்ல, உண்மையில் அவ்விதம் தானிருந்தது. மலைக் குகைக்குள் போகப் போக சூடு அதிகரித்துக் கொண்டிருந்தது. எங்களில் அனேகர், சீக்கில் விழுந்து செத்தும் போனார்கள். சூடான நீரூற்றுக்கள் முன்னைவிடப் பலம் மிகுந்த ஓடைணாகப் பொங்கிப் பாய்த்தன. மண்கட்டிகள் பெயர்ந்து விழுந்தன. லுங்கானோப் பிரதேசத்திலிருந்து வந்த இரண்டு பேருக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது. இரவு நேரங்களில் விடுதியில் தங்கியிருக்கும்போது, பலர் சித்தப் பிரமையோடு புலம்பி அலறியடித்துக் கொண்டு படுக்கையிலிருந்து குதித்தெழுவார்கள்.........
       'நான் சொன்னது சரியாயிருக்கிறதா?' என்று கண்களில் பயம் மிதக்க முனங்குவார் என் தந்தை. அவரது இருமல் மிக மோசமான நிலையை அடைந்தது. 'நான் என்ன சொன்னேன்? இயற்கையை நாம் தோற்கடிக்க முடியாது' என்று சொல்லுவார்.
       இறுதியாக என் தங்தை மீளமுடியாத படுக்கையில் விழுந்துவிட்டார். அவர், என் அப்பா, வலிவுள்ள பெரிய மனிதர்தான். அலர் பிடிவாதத்தோடு, முணுமுணுக்காமல், மூன்று வாரங்களுக்கு அதிகமாகவே போராடினார், தனது உண்மை மதிப்பை உணர்ந்த ஒரு மனிதனைப்போல.
       ஒருநாளிரவு அவர் என்னிடம் சொன்னார்: 'பாவ்லோ, என் வேலை முடிந்துவிட்டது. உன்னை நன்றாகக் கவனித்துக் கொள். உடனே வீடு திரும்பு, தேவமாதா உனக்கு அருள் புரியட்டும்!' பிறகு நெடுநேரம் மெளனமாகயிருந்தார்; கண்களை மூடிக்கொண்டு கனத்த மூச்சு உயிர்த்தபடி கிடந்தார்.”
       அந்த மனிதன் எழுந்து நின்றான்; மலைகளின் மேல் பார்வை எறிந்தான். நரம்பு முடிச்சுகளில் பல சுடக்குப் போடும் தன்மையில் தன் உடலை நீட்டி நெளித்து நின்றான்.