பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



21
        "அப்புறம் என் கையைப் பற்றி என்னைத் தன்னருகிலே இழுத்துக் கொண்டு அவர் சொன்னார் - கடவுளறிய உண்மை, வலின்யார்" - 'பாவ்லோ, என் மகனே! எப்படியும் அது வெற்றியாக முடிந்துவிடும் என்று தான் நான் நினைக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா? நாமும், மது புறமிருந்து குடைந்து வருகிறவர்களும் மலைக்குள் சக்திப்போம். இதை நீ நம்புகிறாய், இல்லையா பாவ்லோ?' ஆம். நான் நம்பத்தான் செய்தேன். 'ரொம்ப நல்லது, என் குழந்தாய்! அதுதான் சரி. தான் செய்கிற காரியத்தில் மனிதன் நம்பிக்கை கொள்ள வேண்டும். வெற்றி பெறுவோம் என உறுதியாக நம்ப வேண்டும். தேவமாதாவின் வேண்டுதல்களுக்கு இணங்கி அவரும் நல்ல காரியங்களுக்குத் துணை புரிகிறார். மகனே, நான் உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அது நடைபெறுமானால், மனிதர்கள் மலையினாள் சந்தித்துவிட்டார்களானால், நீ என் சமாதியருகே வந்து, அப்பா, அது நிறைவேறிவிட்டது என்று சொல். நான் அதை அறிந்து கொள்வேன்’ என்றார்.”
        அதுவும் நல்லது தான். அதனால் நான் வாக்குறுதி அளித்தேன். பின்னர் ஐந்து தினங்களுக்குப் பிறகு அவர் இறந்து போனார். சாவதற்கு இரண்டு நாட்களுக்கு முந்தி, குகையினுள் தான் வேலை செய்து கொண்டிருந்த இடத்திலேயே தன் உடலைப் புதைக்கவேண்டும் என்று அவர் என்னையும் மற்றவர்களையும் கேட்டுக் கொண்டார். அவ்விதமே செய்யும்படி எங்களைக் கெஞ்சிக் கேட்டார். எனினும், சித்தப் பிரமையால் அவர் அப்படிப் புலம்பினார் என்றுதான் நான் நினைக்கிறேன்.
         நாங்களும், மறுபக்கத்திலிருந்து எங்களை நோக்கி நகர்ந்து வந்தவர்களும், என் தந்தை இறந்து பதின்மூன்று வாரங்களுக்குப் பிறகு, மலையினுள் சந்தித்துவிட்டோம். அது வெற்றி விழா நாளேதான். ஒ, பூமிக்குள்ளே அந்த காரத்தினூடே மறுபுறம் நடந்த வேலைகளின் ஒலிகளைக் கேட்டபோது, மண் குடலின் மத்தியிலே எங்களைச் சந்திப்