பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடலில் நடந்தது

வலிக்காடப் பூச்சிகள் இசைத்து கொண்டிருந்தன.

ஆலின் மரங்களின் அடர்ந்த இலைக் கூட்டங்களிடையே ஆயிரமாயிரம் உலோகக் கம்பிகளை முறுக்கேற்றி வைத்திருப்பது போலவும், தடித்த இலைகளைக் காற்று அசைக்கவே அவை ஆடித் துடிப்பது போலவும், இந்த இடையறா மென் ஸ்பரிசத்தினாலேயே கிறுகிறுக்கச் செய்யும் இசை எழுவது போலவுமிருத்தது. அது உண்மையில் அது இசையேயல்ல. எனினும் மாயக் காங்கள் எவையோ அருவமான வீணைகள் பலவற்றைச் சுருதி கூட்டிக் கொண்டிருப்பது போன்ற பிரமையை விளைவித்தது அது; சுருதி கூட்டும் வேலை முடித்ததும் மகத்தான தக்தி வாத்தியங்களிலிருந்து வெற்றிப் பேரொலி ஞாயிறு, வானம், கடல் அணைத்திற்குமுரிய இசையாய்ப் பிரவகிக்கும் என்று எண்ணி எதிர்நோக்கி நிற்கவும் துண்டியது.

மரங்களின் முடிகளையெல்லாம் மலைகளிலிருந்து கடல் நோக்கி நகரும் அலைமுகடுகள் போல் காட்சி தரும்படி ஆட்டி அசைத்துச் சுழன்றது காற்று. கருங்கல் கரை மீது தாளந் தவறாது மந்த கதியிலே மோதிக் கொண்டிருந்தன் அலைகள். உயிருற்ற குவியல்களாய், வாரியிறைத்த நுரைப்பூச்சுகளாய் விளங்கியது. நீலப் பெரும் பரப்பில் தங்கிட வந்த மந்தை மந்தையான பறவைகள்போல் தோற்றமளித்த நெடுங்கடல். ஒரு திக்கு நோக்கியே பாய்கின்றன அவை; பின் ஆழத்திலே பம்மி விடுகின்றன, மீண்டும் மெல்லொலி இசைத்து எவ்விப் பாய்வதற்காக விழிப்புறும் அவற்றை ஏய்ப்புக் காட்டித் தடம் மாறச் செய்ய முயல்வன போல, மூன்று பாய்கள் விரித்த படகுகள் இரண்டு தொடுவானத் திருகே உயர்த்தும் தாழ்ந்தும் மிதந்தன. அவைகூட சாம்