பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

காற்றைவிட ஒரு கொள்ளைக்காரன் யோக்கியமானவன். என்னவானாலும் இந்த இயற்கைச் சக்திகளைவிட மனிதர்கள் எப்பொழுதுமே யோக்கியமானவர்கள்தான்.

ஆமாம். அன்றைக்கும் இதேமாதிரிக் காற்று தான் கரையி லிருந்து நாலு கிலோமீட்டருக்கு அப்பாலே எங் களைத் தாக்கியது. மிகவும் சமீபத்தில் தான். நாங்கள் எதிர்பாராத வேளையிலே கோழை மாதிரி, கயவாணிப் பயல் போல அது எங்களை அமுக்கி விட்டது.

'கிடோ'! என்று கத்தினார் என் அப்பா. முடிச்சு முடிச்சாக இருந்த தன் கைகளால் துடுப்பை அழுக்கிப் பிடித்துக் கொண்டே கத்தினர் : 'கிடோ, அழுந்தப் பிடித்துக் கொள். சீக்கிரம், நங்கூரம் பாய்ச்சு :

ஆனால் நங்கூரத்திற்காக நான் தட்டித் தடுமாறிக் கொண்டிருக்கையில் காற்று என் தந்தையின் கையிலிருந்த துடுப்பைப் பிடுங்கி எறிந்து, அவர் மார்பிலே பலத்த அறை ஒன்று கொடுத்த விட்டது ; அவரை அப்படியே பிரக்ஞை. தப்பி படகின் அடியிலே சுருண்டு விழும்படி செய்தது. எனக்கோ அவனைக் கவனிக்கக்கூட நேரமில்லை. ஒவ்வொரு வினாடியும் எங்களைத் தூக்கிக் கடலிலேபோட்டு விடுவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஆரம்பத்திலே எல்லாம் ரொம்பவும் துரிதமாக நடைபெற்றன. நான் துடுப்புகளைப் பற்றி வலிப்பதற்குள் நாங்கள் இழுப்புண்டு அலைந்தோம். எங்களைச் சுற்றிலும் வெண் துளிகள் பரவி கின்றன. அலை முடிகளிலிருந்து காற்று நுரைத் துளிகளை அள்ளித் தெளித்தது, பாதிரியார் செய்கிற மாதிரி. ஆனால் மிகவும் அதிகப் படியான வலுவுடன் செய்தது. இது ; எங்கள் பாபங்களைக் கழுவுவதற்காகச் செய்யப்படவுமில்லை ! -

என் தந்தை மயக்கம் தெளிந்து எழுந்ததும் 'நிலைமை ரொம்ப மோசமாக யிருக்கிறது, மகனே' என்றார். கரைப்


* ஒரு கிலோமீட்டர் என்பது கிட்டத்தட்ட அரையே அரைக்கால் மைலாகும்.