பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தெறித்து விட்டது. என்ன வலி வலித்ததென்று எனக்கு இப்ப ஞாபகமில்லை; ஆனுல் அன்றைக்கு நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது என் முழி பிதுங்கி வெளியே வந்து விழுந்து விட்டது ரொம்ப பயங்கரமான விஷயம் ஐயா அது! அதை எடுத்துப் பழைய இடத்திலே பொருத்தி வெதுவெதுவென்று ரெட்டி மாவை வைத்துக் கட்டுப் போட்டார்கள். இருந்தும், பிரயோசனமில்லை. கண் போனது போனது தான்!

ஆரோக்கியம் குன்றித் தொங்கிய கன்னத்தை அழுத்த மாகத் தேய்த்துக் கொண்டே, மனேகரமான ஆனந்தப் புன்னகிையை மறுபடியும் சிதறினுன் அந்தக் கிழவன்.

'அந்தக் காலத்திலே இப்போ இருக்கிறது போல இவ்வளவு டாக்டரய்யாக்கள் கிடையாது. ஜனங்கள் முட்டாள்தனமாக வாழ்க்கை நடத்தினுர்கள். ஆமாம், அப்படித்தான். ஆனுல் அவர்களிடம் அன்பும் இாக்கமும் அதிகமிருந்தது. ஹே!'

இந்த இடத்தில், ஆழ்ந்த வரைகளும் பூஞ்சு பிடித்தது போல் தோற்றமளித்த பசிய சாம்பல் நிற ரோமங்களும் படிந்து தோலாகிப் போன, ஒரு கண் மாத்திரமே யுள்ள, முகம் சாமர்த்தியமும் தந்திரமும் கலந்ததொரு பாவம் ஏற்றது.

‘என்னவ்வளவு வயசுக்கு நீங்களும் வாழ்த்தால், நீங்க ளும் மனிதரைச் சரியாக எடைபோட்டுவிட முடியும். நீன் கள் அப்படி நினைக்கவில்லையா என்ன?'

கறுத்துக் கோணிப் போயிருந்த விரல் ஒன்றைக் கம்பீரமாக உயர்த்தி நீட்டினுன், யாரையோ குற்றம் சாட்டு வது போல.

"மக்களைப் பற்றி நான் உங்களுக்குச் சில விஷயம் சொல்கிறேன், ஐயாமார்களே...