பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அன்பாகத்தா னிருக்கிருள்' என்று இடா சொன் னுன்.

அப்படியே நாங்கள் முடிவு செய்தோம் - பூமியே எங் கன் படுக்கையாகட்டும்; வானமே எங்களுக்கு மேல்விதான மாக அமையட்டும்.

இப்பொழுது வேருெரு கதை ஆரம்பமாகிறது, ஐயா. நீங்கள் கவனமாய்க் கேளுங்கள். ஏனெனில் எனது நீண்ட வாழ்விலேயே இதுதான் மிகச் சிறந்த கதை.

எக்கன் கல்யாணத்திற்கு முக்கிய தினம் அதிகாலை வில், வயோதிகக் கியாவன்னி சொன்னுர் - அவருக்காக தான் ஏகப்பட்ட வேலைகள் செய்து முடித்திருந்தேன் - இதுமாதிரிச் சின்ன விஷயங்களைப் பற்றிப் பேசுவதை அவர் வெறுத்ததால், என்னிடம் அவர் மூக்காலே முண முணந்தார்:

'யுகோ, பழைய ஆட்டுப்பட்டி இருக்கிறதே அதை நீ சுத்தப்படுத்த வேண்டும். சுத்தமான வைக்கோலைக் கொஞ் சம் அங்கே போட்டு வை. அது காய்ந்து கிடக்கிற தரை தான். ஒரு வருஷத்திற்கு மேலாகவே அங்கு ஆடுகள் அடைபடவில்லை. இருந்தாலும்' நீயும் இடாவும் அதிலே வசிக்க விரும்பினுல் முதல்லே அந்த இடத்தை சுத்தம் சேய்து கொள்வது நல்லது.'

இப்படியாக எங்கள் வீடு அமைந்து விட்டது.

குஷியாகப் பாடிக்கொண்டே அந்த ஆட்டுக் கொட் டிலைச் சுத்தம் செய்யும் வேலையில் நான் மும்மரமாக யிருந்த போது, தச்சு வேலை செய்யும் காஸ்டன்ஸோ அங்கே கத வருகே வந்து நிற்பதைப் பார்த்தேன்.

'ஆகவே நீயும் இடாவும் குடித்தனம் போடப் போகிற இடம் இதுதானுக்கும்? சரிதான், படுக்கை எங்கேப்பா? எங்க விட்டிலே அதிகப்படியாக ஒரு படுக்கை கிடக்குது.