பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

இதைச் சுத்தம் செய்து முடித்ததும், வந்து அதை எடுத் துக் கொள்'என்றான். -

- நான் அவன் வீட்டிற்குப்போகையில், வழியில் கடை வைத்திருந்த வம்புக்காரி மரியா கத்தினாள் : 'அசடுகள், கல்யாணம் செய்து கொள்கிறதாம் ! அதுவும் பெயருக்கு ஒரு விரிப்போ தலையணையோ கூட இல்லாமல்! ஏய் ஒற்றைக்கண் மனுஷா, உனக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கு பரவால்லே, உன் மணப் பெண்ணை என்னிடம் அனுப்பிவை...' -

பக்க வாதத்தினாலும் காய்ச்சலினாலும் வதையுறும். கொண்டி எட்டோர் வியானோ தனது வீட்டு வாசலில் நின்ற படியே அவளை நோக்கிக் கூச்சலிட்டான் :

‘விருத்தாளிகளுக்காக அவன் எவ்வளவு ஒயின் சேர்த்து வைத்திருக்கிறான் என்று கேளு. ஆகா, மனுஷர்கள் எவ்வாறு தான் இப்படிப் புத்தி கெட்டுப் போவார்களோ!...”

அந்தக் கிழவனின் கன்னத்து மடிப்புகள் ஒன்றின்மீது மினுமினுத்தது கண்ணீரின் ஒளித் துளி ஒன்று. அவன் தலையைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி ஓசையற்ற சிரிப்புச் சிரித்துக்கொண்டான். அதனால், அவன் தொண்டையில் எலும்பாகத் துருத்தி நின்ற 'ஆதாம் ஆப்பிள்' ஏறி இறங்கியது ; தளர்ந்து தொங்கிய சருமம் ஆடி நடுங்கிக் கொண்டிருந்தது.

- சிரிப்பினால் திக்குமுக்காடி, சிறுபிள்ளைத்தனமான உற்சாகத்தினால் கைகளை ஆட்டி அசைத்துக் கத்தினான் அவன்: 'ஒ, வலின்யாரி, வலின்யாரி கல்யாணத்தன்று காலையிலே எங்கள் வீட்டுக்கு வேண்டிய எல்லாம் எங்களுக்கு வந்து சேர்ந்திருந்தன - மடோனாச் சிலை ஒன்று, பாத்திரங்கள், துணிமணிகள், தட்டு முட்டுச் சாமான்கள், எல்லாம். எல்

  • தேவமாதா