பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பெப்பிக்கு வயது பத்துதான். பல்லி மாதிரி மெலிந்து, ஒல்லியாய், ஒட்ட ஆட்டம் மிகுந்தவனாய் விளங்கினான் அவன். அவனது கும்பிய தோள்களின் மீது பல வர்ணக் கந்தல்கள் தொங்கும். வெயிலாலும் புழுதியினாலும், கறுத்துப் போன சருமம் துணிகளிலுள்ள எண்ணற்ற கிழிசல்களின் வழியாக எட்டிப் பார்க்கும்.

     காய்ந்து போன புல் மாதிரி, கடல் காற்று அப்படியும் இப்படியும் ஆட்டி அலைக்கழிக்குமே சருகு, அது மாதிரித் தான் அவனுமிருந்தான். பொழுது விடிந்ததிலிருந்து அடையும்வரை பெப்பி அந்தத் தீவிலுள்ள கற்கள் மீது ஒன்றிலிருந்து மற்றதுக்கென்று தாவிக் கொண்டேயிருப்பான். ஒடுங்காத அவன் குரல் ஒயாது மணிக் கணக்கில்லே
              'எழில் மிகு இத்தலி
                  என்னரும் நாடே!'
   என்று இசைந்து முழங்குவதை எவரும் கேட்க முடியும்.
        மண் மீது மலர்ந்து மண்டிக் கிடக்கிற வண்ணப் பூக்கள், பாசி பற்றிய பாறைகளிடையே பதுக்கிப் பம்முகிற பல்லிகள், சிரத்தையுடன் சித்தரித்த எழில் உருவங்கள் போன்ற ஆலிவ் மர இலைகளுடும் கலையை மென்கோடுகள் ஒடும் திராட்சைக் கொடியிலைகளினூடும் அமர்ந்திருக்கும் பறவைகள், ஆழ்கடலின் அடித்தலத்தில் உள்ள அடர்ந்த செடித் தொகுதிகளிடையே வைகும் மீன்கள், நகரின் ஒடுங்கி வளைந்த வீதிகளிலே நடமாடும் அயல்நாட்டு மனிதர்கள் - கத்தி வெட்டு ஏற்ற முகமுடையதடி. ஜெர்மானியன், ஜனத்துவேஷி வேஷம் போட்டுக் கொண்டு திரிபவன் போல் காட்சி தரும் இங்கிலீஷ்காரன், இங்கிலீஷ்காரன்