பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தின்பது நமக்கு அழகல்ல! என்று கூறித் தன் மனிதத் தன்மையை நிலைநாட்டிக் கொண்டான் கொலம்பஸ்.

கடைசியாக ஜூன் மாதத்தில் ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்தன இரு கப்பல்களும். கப்பல்களிலிருந்து இறங்கியவர்கள், பஞ்சைகளைப் போல் குழி விழுந்த கண்களும் வற்றி ஒட்டிய வயிறுமாகப் பார்க்கப் பரிதாபமான கோலத்துடன் இறங்கினார்கள்.

அவர்கள் நாட்டில் பரப்பிய வசவுகளும் பழிகளும் கொலம்பஸ் சகோதரர்களை, இந்தியத் தீவுகளைப் பற்றியே நினைக்காதபடி செய்திருக்கும் வலிவைப் பெற்றிருந்தன; கொலம்பசின் செல்வாக்கை அடியோடு குறைத்து அவமானப் படுத்தக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தன. ஆனால் போர்ச்சுக்கீசிய அரசர் இந்தியாவுக்கு வழிகாணச் செய்த முயற்சியும், இங்கிலாந்து மன்னர் ஹென்றி கத்தேயுவுக்குக் கடல் வழி காணச் செய்த முயற்சியும், ஒரு போட்டியுணர்ச்சியை ஏற்படுத்தின. அந்த உணர்ச்சிக்கு ஆட்பட்ட ஸ்பெயின் அரசியும் அரசரும் இஸ்பானியோலாவை விட்டு விடக் கூடாதென்று எண்ணினர்.